Wednesday, November 15, 2006

<<>>சிட்டுக் குருவியின் தாகம்...4<<>>

4. ஹரித்வாரா? ஹரத்வாரா? அது ஹர் த்வார்; எனில், அனைத்துக்கும் வாயில். பத்ரி, கேதார் மட்டுமன்றி, ரிஷிகேஷிலிருந்து துவங்கிப் பலப்பல திருத்தலங்களுக்குத் தலைவாசலாக விளங்குகிறது ஹர் த்வார். (ஹர் = அனைத்துக்கும் த்வார் = வாயில்) எத்தனையோ அமைப்புகளின் ஆச்ரமங்கள் உள்ளன. தங்குவதற்குக் கணக்கற்ற விடுதிகள் உள்ளன. கட்டணங்கள் மலிவுதான். ஏராளமான உணவு விடுதிகள். ஆலு பராட்டாவும் தயிரும், சுடச்சுட குலாப் ஜாமுனும் ஆஹா! எத்தனையோ படித்துறைகள் இருந்ததலும் 'ஹர் கி பெளடி' அதாவது 'ஹரியின் பாத தூளி' என்னும் கட்டம் மிகவும் பிரசித்தியானது. கட்டவிழ்ந்து ஓடும் கங்கை, யாத்ரிகளின் வசதிக்காகத் தேக்கித் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. பழைய மணிக்கூண்டு அலங்கரிக்கும் ஒரு நீளத்திடல் கங்கையை இரண்டாகப் பிரிக்கிறது. இடப்புறம், பிரம்மதீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. அங்கே பெரும்பாலும் இறந்தவர்களுக்கான சடங்குகள் செய்கிறார்கள். பண்டாக்கள் பிடுங்கித் தின்கிறார்கள் என்பதெல்லாம் பொய். க்ரெடிட் கார்டு, செல்பேசிக்காரர்களைக் காட்டிலும் எதுவும் கொடுமையாக இல்லை. அவரவர் வசதிக்கேற்பச் சடங்குகள் செய்துகொள்ளலாம். பாதையிலிருந்து இறங்கிப் படித்துறைக்குச் செல்லவேண்டும். எப்போதும் கூட்டமாக இருக்கும் குறுகிய சாலைகள். திடீரென்று மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப்போய், மக்கள் முகங்களில் பீதி கலந்த பிரகாசம். என்னவென்று பார்த்தால், பிரம்மாண்டமான குரங்குகள் சாரிசாரியாக மட்டுமன்றி, ஜோடிஜோடியாகக் கைகோத்துக்கொண்டு சாலையைக் கடந்துகொண்டிருந்தன. யாரும் சத்தம்கூடப் போடக்கூடாது என்று எச்சரித்தார்கள்! அவசியமற்ற எச்சரிக்கை, எவன் வாயைத்திறப்பான்?!குரங்குகள் நம்மைக் கவனித்ததாகவே தெரியவில்லை.
வழியெங்கும் பிச்சை கேட்கிறார்கள். சாதுக்கள் அமர்ந்திருக்கிறார்கள். பார்வை சந்தித்தால் பார்வையாலேயே கேட்கிறார்கள். பாரதியின் அச்சமில்லைப் பாட்டில், \'பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்...\' என்றொரு வரி வருகிறது. நம்நாட்டில், பிச்சையெடுத்தல் இரண்டு விதம். முதல்ரகத்திற்குப் பெரும்பாலும் வறுமையே காரணம்; சோம்பலே காரணம் என்று நினைக்காதீர்கள்! வீட்டைவிட்டு ஏதோ காரணத்தினால் விலக்கப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்களும் இதில் உண்டு. பிச்சை போடுவதால்தான் அது வளர்கிறது, அதை நாம் ஊக்குவிக்கக்கூடாது, அது ஒரு எத்துவேலை என்றெல்லாம் அறிவார்ந்த போதனைகள் அன்றாடம் கேட்கிறோம். கூட்டம் போடுவோம், கூடி விவாதிப்போம், சட்டங்கள் இயற்றுவோம். அதற்கு முன்னால், நீட்டிய கரத்தில் காசோ சோறோ துணியோ போட்டுவிடுவோம். இரப்பாரைக் காட்டிலும் இடாதாரே \'சிறுகுலத்தோ\' ரல்லவா? \n இன்னொரு ரகம் சன்னியாசம். துறவு, பொதுவாய், இருவகைப்பட்டது. ஒன்று, வைராக்கியம் ஏற்பட்டபின் மேற்கொள்ளப்படும் துறவு. இன்னொன்று, வைராக்கியம் ஏற்படுவதற்காக மேற்கொள்ளப்படும் துறவு. இந்த இரண்டு ரகத்தாரையும் நம்நாட்டின் திருத்தலங்களில் காணலாம். ஒருகாலத்தில், அரசர்கள் ஒருகட்டத்தில், ஆட்சிப்பொறுப்பை மகனுக்கோ (தகுதியுடையவனாய் இருந்தால்) அல்லது பொறுப்புள்ள ஒருவருக்கோ தந்துவிட்டுத் தவம்புரியச் செல்வார்கள். அரண்மனையை விட்டுவிட்டு ஆரண்யம் புகுவார்கள். செல்வத்திலும், சிறப்பிலும் இருந்தவர்கள் வலிந்து வறுமையைத் தழுவுவார்கள். அப்படிப்பட்ட ஒரு மனப்பாங்கின் தாக்கத்தை இன்றும் -- கவனித்தால் -- காணலாம். \n ஹர்த்வாரில், சாதுவுக்குத் தங்க இடமோ, உண்ண உணவோ பிரச்னையில்லை. ஒவ்வோர் ஆச்ரமத்திலும் மூன்றுமூன்று நாட்கள் தங்கிக்கொள்ளலாம். மடங்களும், சத்திரங்களும் உள்ளன. பலவிடங்களில், படித்துறையிலேயே இலவசமாக ரொட்டி வழங்குகிறார்கள். போதாதா? \n ஒரு டீக்கடைக்குப்பின் உட்கார்ந்திருக்கிறேன். கங்கையிலே கால்நனைத்தபடி. மாலை நேரம். பளபளக்கிறாள். ஆடிக்கொண்டிருக்கும் என்கால்களுக்குத் தங்கக் கொலுசு போட்டு மகிழ்கிறாள். எதையும் விழையாத ஒரு மனோபாவம்; தேவைகள், கோரிக்கைகள் யாவும் தீர்ந்துபோன நிம்மதியில் நேர்ந்த வினோதக் களைப்பு; எக்களிப்பற்ற ஏகாந்தம். மெல்லமெல்ல, வானும், கரைகளும், படித்துறைகளும், நகரின் விளக்குகளும், மக்களும், அரவங்கள் அத்தனையும் மெல்லமெல்ல மங்கி மறைகின்றன. வெட்டவெளியில் நிலைகுத்திப்போய், பார்வை செயற்படாத கண்களின் எதிரே, கற்றை மின்னலும் ஒற்றை நிலவும் குலவி நெய்த எழிலோவியமாய் எதிரே கங்கை எழுந்து நிற்கிறாள். பார்வை வரவர, பனிப்பாதை வளைவின் புகைச்சுருளாய்ப் புன்னகைத்துக் கரைகிறாள். நான் கண்பனித்துக் கரைகிறேன். \n",1]
);
//-->
வழியெங்கும் பிச்சை கேட்கிறார்கள். சாதுக்கள் அமர்ந்திருக்கிறார்கள். பார்வை சந்தித்தால் பார்வையாலேயே கேட்கிறார்கள். பாரதியின் அச்சமில்லைப் பாட்டில், 'பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்...' என்றொரு வரி வருகிறது. நம்நாட்டில், பிச்சையெடுத்தல் இரண்டு விதம். முதல்ரகத்திற்குப் பெரும்பாலும் வறுமையே காரணம்; சோம்பலே காரணம் என்று நினைக்காதீர்கள்! வீட்டைவிட்டு ஏதோ காரணத்தினால் விலக்கப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்களும் இதில் உண்டு. பிச்சை போடுவதால்தான் அது வளர்கிறது, அதை நாம் ஊக்குவிக்கக்கூடாது, அது ஒரு எத்துவேலை என்றெல்லாம் அறிவார்ந்த போதனைகள் அன்றாடம் கேட்கிறோம். கூட்டம் போடுவோம், கூடி விவாதிப்போம், சட்டங்கள் இயற்றுவோம். அதற்கு முன்னால், நீட்டிய கரத்தில் காசோ சோறோ துணியோ போட்டுவிடுவோம். இரப்பாரைக் காட்டிலும் இடாதாரே 'சிறுகுலத்தோ' ரல்லவா? இன்னொரு ரகம் சன்னியாசம். துறவு, பொதுவாய், இருவகைப்பட்டது. ஒன்று, வைராக்கியம் ஏற்பட்டபின் மேற்கொள்ளப்படும் துறவு. இன்னொன்று, வைராக்கியம் ஏற்படுவதற்காக மேற்கொள்ளப்படும் துறவு. இந்த இரண்டு ரகத்தாரையும் நம்நாட்டின் திருத்தலங்களில் காணலாம். ஒருகாலத்தில், அரசர்கள் ஒருகட்டத்தில், ஆட்சிப்பொறுப்பை மகனுக்கோ (தகுதியுடையவனாய் இருந்தால்) அல்லது பொறுப்புள்ள ஒருவருக்கோ தந்துவிட்டுத் தவம்புரியச் செல்வார்கள். அரண்மனையை விட்டுவிட்டு ஆரண்யம் புகுவார்கள். செல்வத்திலும், சிறப்பிலும் இருந்தவர்கள் வலிந்து வறுமையைத் தழுவுவார்கள். அப்படிப்பட்ட ஒரு மனப்பாங்கின் தாக்கத்தை இன்றும் -- கவனித்தால் -- காணலாம். ஹர்த்வாரில், சாதுவுக்குத் தங்க இடமோ, உண்ண உணவோ பிரச்னையில்லை. ஒவ்வோர் ஆச்ரமத்திலும் மூன்றுமூன்று நாட்கள் தங்கிக்கொள்ளலாம். மடங்களும், சத்திரங்களும் உள்ளன. பலவிடங்களில், படித்துறையிலேயே இலவசமாக ரொட்டி வழங்குகிறார்கள். போதாதா? ஒரு டீக்கடைக்குப்பின் உட்கார்ந்திருக்கிறேன். கங்கையிலே கால்நனைத்தபடி. மாலை நேரம். பளபளக்கிறாள். ஆடிக்கொண்டிருக்கும் என்கால்களுக்குத் தங்கக் கொலுசு போட்டு மகிழ்கிறாள். எதையும் விழையாத ஒரு மனோபாவம்; தேவைகள், கோரிக்கைகள் யாவும் தீர்ந்துபோன நிம்மதியில் நேர்ந்த வினோதக் களைப்பு; எக்களிப்பற்ற ஏகாந்தம். மெல்லமெல்ல, வானும், கரைகளும், படித்துறைகளும், நகரின் விளக்குகளும், மக்களும், அரவங்கள் அத்தனையும் மெல்லமெல்ல மங்கி மறைகின்றன. வெட்டவெளியில் நிலைகுத்திப்போய், பார்வை செயற்படாத கண்களின் எதிரே, கற்றை மின்னலும் ஒற்றை நிலவும் குலவி நெய்த எழிலோவியமாய் எதிரே கங்கை எழுந்து நிற்கிறாள். பார்வை வரவர, பனிப்பாதை வளைவின் புகைச்சுருளாய்ப் புன்னகைத்துக் கரைகிறாள். நான் கண்பனித்துக் கரைகிறேன்.
ரமணன்


கேதார யாத்திரையின் துவக்கம் ஹர் த்வார். ஆனால், கங்கைக் குளியலில் எல்லாமே மறந்துபோய் விடுகிறது. பெரிய தொன்னைகளில், பெண்கள் மலர்கள், விளக்கு ஆகியவற்றை ஏந்திப் பிரார்த்தனை செய்தபடி கங்கையில் விடுகிறார்கள். ஏதேதோ ஊர்களிலிருந்து வந்திருக்கும் அவர்களைப் பார்த்தாலே 'பராசக்தி!' என்று பரவசமாய்க் கூவத் தோன்றுகிறது. இவர்கள் எதற்காகக் கோவிலுக்குச் சென்று கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள்? கண்ணாடி பார்த்தால் போதாதோ?

இதைக்கேட்கவும் செய்தேனே! ஆ! அந்த அட்டைக் கறுப்புக் கன்னங்களில் எங்கிருந்து வந்து தோன்றி நெளிந்ததோ ஒரு நாணச் சிவப்பு மின்னல்!! \n உணர்ச்சி வசப்பட்டுச் சொல்லவில்லை; உள்ளார்ந்த உணர்வோடு சொல்லுகிறேன்: பெண்மை சிறப்பிக்கப்படும் வரை, இந்த நாட்டில் அறமும், அன்பும், வீரமும் தழைக்கும். இருட்டை விலக்குகிறோம் என்ற உணர்வு விளக்குக்கு இருப்பதில்லை. அதுபோலத்தான் பாரத நாட்டுப் பெண்கள். ஏன், அவர்கள் அடக்கப்படுவதில்லையா? அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதில்லையா? என்றெல்லாம் கேள்விகள் எழலாம். அவை நியாயமாகவும் இருக்கலாம். இந்தக் கூட்டங்கள், கோஷங்கள், அறிக்கைகள், கோபங்கள் எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கிவைத்து விட்டு கங்கைக்கு வாருங்கள் என்று கனிவோடு அழைக்கிறேன். அங்கே, அங்கிருந்து புரிந்து கொள்வீர்கள் நான் என்ன சொல்கிறேன் என்று!

விடுதலை என்பது சில இடங்களில் கேட்டு வழங்கப்படுவது; சில இடங்களில் போராடிப் பெறப்படுவது. ஆனால், இந்தியப் பெண்ணைப் பொறுத்தமட்டில், அது உணரப்படுவது, நினைவுகூரப்படுவது! மோழையிலே பொறியாகக் காணப்படுவதுதான் ஊழியிலே கூத்தாக எழுந்து நிற்கிறது! பெண்மையின் கொடையில் பிழைப்பதுதான் ஆண்மை. இந்தியப் பெண் என்று தன்னை உணர்கிறாளோ, அன்று தருமத்திற்குப் பொன்னாள்! தரணிக்கெல்லாம் நன்னாள்! ஒன்று சொல்லவா? கல்வியில்லாத எத்தனையோ பெண்மணிகள் கண்திறந்துதான் இருக்கிறார்கள்!

கங்கை போலவே கனலும் புனலுமாகவும் கைவிளக்காகவும் காவல் தெய்வமாகவும் அன்றாட வாழ்க்கையின் நடைக்கு அச்சாணியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கல்விமான்கள் அல்ல கல்விச்சாலைகள்! கங்கையின் களியாட்டத்தில் களைப்பு தீர்ந்தது. உடல்மட்டுமல்ல, உள்ளமும் இளைப்பாறியது. ஆசுவாசத்தில் நேர்ந்த ஆயாசத்தை ரசித்தபடிப் படியேறி வந்தேன். ஒரு பெண்மணி தேனீர் விற்கிறாள். கன்னங்கறுத்த முகம்; மின்னற் சிரிப்பு; உடுக்கள் போற் கடுக்கன்கள்; உல்லாச நிலவாய் மூக்குத்தி. பத்துப்பேரைப் பந்தாடும் வலிய தேகம். பேச்செல்லாம் பசுமழலை! 'சகோதரி! இங்கே உட்காரலாமா?' என்றதும் பதறிவிட்டாள். "அதென்ன அப்படிக் கேட்கிறீர்கள்? அதற்காகத்தானே பெஞ்சு போட்டிருக்கிறது!" அற்புதமான தேனீர் கொடுத்தாள். நெஞ்சில் இறங்கும் இளஞ்சூட்டை ரசித்தபடியே அவளிடம் கேட்டேன், 'அதெப்படி உன்னால் இவ்வளவு பிரககசமாகச் சிரிக்க முடிகிறது?' சற்றே வெட்கப்பட்டுச் சுதாரித்துக்கொண்டு சொன்னாள் 'செய்ய வேண்டியதைச் செய்கிறேன். நடக்க வேண்டியதை அவன் பார்த்துக் கொள்வான். நல்லது கெட்டது அவனுக்குத் தெரியாதா? இல்லை, நமக்குத்தான் புரியாதா? அட, சிட்டுக் குருவியின் தாகத்தைத் தீர்க்கத் தெரியாதா கங்கைக்கு?!' என்று சோழி குலுங்கச் சிரித்தபடி, மங்கிய ஸ்டவ்வை மறுபடி விசைத்தாள். நான் வியப்பில் உறைந்தேன். ]

ரமணன்

No comments: