Wednesday, November 15, 2006

<<>>கங்கைக் கரையில்...3<<>>

3. கங்கைக் கரையில் நிற்கிறேன். தவத்தில் எழுந்த
நெருப்பில் பிறந்த செந்தமிழ்க் கவிதைபோலே,
கட்டறுந்து விரைகிறாள் கங்கை! காணக்காண,
உள்ளச் சிமிழ் உடைந்து வெள்ளமென எண்ணங்கள்
விம்மி வருகின்றன. நதி, பெண்தான், ஐயமே இல்லை.
இந்த நளினமும், ஓயாமல் கறையைக் கழுவி,
ஒருவரின் நன்றிக்கும் காத்திராமல் விரையும்
கருணையும், சுமையைச் சுவையாய்க் கருதும்
தயையும், மாறிமாறித் தோற்றமளித்தும் மாறாத
பேரழகும், இந்தப் பிரபஞ்சத்தில் பெண்ணைத்
தவிர யாருக்குண்டு?

கங்கை என் தாய், என்னைக் கழுவும்போது.
என் தோழி, என் கால்களைக் கிசுகிசுத்தபடிப்
பலப்பல வண்ணக் கதைகள் சொல்லும்போது.
குளியல் வேறு; முழுக்குப் போடுவது வேறு.
குளித்துவிட்டுத்தான் புனித நதிகளில் இறங்க
வேண்டும். இறங்கி, பாவங்களுக்கு முழுக்குப்
போடவேண்டும். கங்கை முக்திக்கு, வினை
இடையூறாக வராமல் பார்த்துக்கொள்வாள்.
'கங்கையில் எத்தனை மீன்கள்! அவையும்
முக்தி பெறுமோ?' என்று வினவுகிறார்
கபீர்தாஸ். பெறாதுதான்! முழுக்குப்
போட்டால்தான் முக்தி!

இனி, அறத்திலிருந்து சற்றும் பிறழேன்.
இந்த முடிவு இனிதே நிறைவேறத் துணைபுரிவாயாக
என்று முழுக்குப் போடவேண்டும். அப்போது, போனவினை போனவினையாய்ப் போகும். சரி, பாவம் எது? ஊட்டிய கரத்தைக் கடிப்பது, நாட்டை, தாய்மொழியை, அன்பு மனைவியை, அருமைக் குழந்தைகளைப் பழிப்பது, கையில் பொருளிருக்கக் கை நீட்டிய ஏழைக்குக் கஞ்சிகூட வார்க்காமல் விரட்டுவது, பொய்மை, திருட்டு, பொறாமை இவை போன்றவையே! இவற்றுக்கு முழுக்குப் போட்டு, முழுமனிதனாய் எழுந்து கரைக்கு வரக் கங்கை அற்புதமான வாய்ப்பு! காலைக் கதிரொளியில் தங்கச் சரிகை விரிக்கிறாள். கரையருகே கைவீசுகிறாள். நடுவே, சிறகு முளைத்துப் பறக்கிறாள். பலப்பல மகத்தான நாகரிகங்கலின் மலர்ச்சிக்குத் தோதாயிருந்தவள். மாமுனிவோர் தவம் சத்திய தரிசனத்தில் முடிந்து அற்புதக் கவிதைகளாக வெளிப்பட்டபோது காது குளிரக் கேட்டவள். சாம்ராஜ்ஜியங்களின் சரிவுகளுக்குச் சாட்சியாய் இருந்தவள்.

சீதையின் பாதம்பட்டுச் சிலிர்த்தவள். இன்றும் நாட்டின் விளக்கைக் காத்துவரும் ஏழைகளின் பாதங்களைத் தொட்டுத் தொட்டு வணங்குகின்றவள். மட மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டும் புனிதம் மாறாதவள்.

வானில் மந்தாகினியாய், வழியே ஜான்வியாய், பகீரதன் தவம் பலித்தபோது பாகீரதியாய், இதோ மலையைவிட்டுச் சமவெளியில் புகும்போது கங்கையாய்ப் பொங்கி வருகிறாள். நாம்காணும் நீருக்குக் கங்கையே மூலம். கரையோரம் கூடச் சங்கிலியைப் ப்டித்துக் கொண்டுதான் குளிக்க வேண்டியுள்ளது. அப்போதும் பறப்பது போல் உடலை விசைக்கிறது அவள் வேகம். என்னென்னெ நம்பிக்கைகளுடன், எங்கெங்கிருந்து எத்தனை எத்தனை மனிதர்கள்! கங்கை, காதல் போல், காந்தம். அழகுக்கும், ஈர்ப்புக்கும் காரணமுண்டோ? விளக்கத்தான் முடியுமோ? விலகத்தான் ஒண்ணுமோ?! \n சின்னஞ் சிரிய சிறுமி, கையில் சிறு தட்டுடன் எதிரே நிற்கிறாள். என்னைச் சாய்வாகப் பார்த்து, 'திலகமிடவா?' என்ரு இனிமையாகக் கேட்கிறாள்.

பதிலுக்குக் காத்திராமல் பிஞ்சு விரலால் சிந்தூரம் குழைத்து பற்றிய நெற்றி குளிரக் குளிர இடுகிறாள். லஹரியில், அவளது பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன். அசையாமல் ஏற்கிறாள். நெகிழ்ந்து கிடந்தவனின் மீது ஒளிப்பார்வை வீசிவிட்டுக் கூட்டத்தில் மறைகிறாள்.\n ரமணன்\n4. ஹரித்வாரா? ஹரத்வாரா? அது ஹர் த்வார்; எனில், அனைத்துக்கும் வாயில். பத்ரி, கேதார் மட்டுமன்றி, ரிஷிகேஷிலிருந்து துவங்கிப் பலப்பல திருத்தலங்களுக்குத் தலைவாசலாக விளங்குகிறது ஹர் த்வார். (ஹர் - அனைத்துக்கும் த்வார் - வாயில்)

எத்தனையோ அமைப்புகளின் ஆச்ரமங்கள் உள்ளன. தங்குவதற்குக் கணக்கற்ற விடுதிகள் உள்ளன. கட்டணங்கள் மலிவுதான். ஏராளமான உணவு விடுதிகள். ஆலு பராட்டாவும் தயிரும், சுடச்சுட குலாப் ஜாமுனும் ஆஹா! எத்தனையோ படித்துறைகள் இருந்ததலும் \'ஹர் கி பெளடி' அதாவது 'ஹரியின் பாத தூளி' என்னும் கட்டம் மிகவும் பிரசித்தியானது. கட்டவிழ்ந்து ஓடும் கங்கை, யாத்ரிகளின் வசதிக்காகத் தேக்கித் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. பழைய மணிக்கூண்டு அலங்கரிக்கும் ஒரு நீளத்திடல் கங்கையை இரண்டாகப் பிரிக்கிறது.

இடப்புறம், பிரம்மதீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. அங்கே பெரும்பாலும் இறந்தவர்களுக்கான சடங்குகள் செய்கிறார்கள். பண்டாக்கள் பிடுங்கித் தின்கிறார்கள் என்பதெல்லாம் பொய். க்ரெடிட் கார்டு, செல்பேசிக்காரர்களைக் காட்டிலும் எதுவும் கொடுமையாக இல்லை. அவரவர் வசதிக்கேற்பச் சடங்குகள் செய்துகொள்ளலாம். பாதையிலிருந்து இறங்கிப் படித்துறைக்குச் செல்லவேண்டும். எப்போதும் கூட்டமாக இருக்கும் குறுகிய சாலைகள். திடீரென்று மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப்போய், மக்கள் முகங்களில் பீதி கலந்த பிரகாசம். என்னவென்று பார்த்தால், பிரம்மாண்டமான குரங்குகள் சாரிசாரியாக மட்டுமன்றி, ஜோடிஜோடியாகக் கைகோத்துக்கொண்டு சாலையைக் கடந்துகொண்டிருந்தன. யாரும் சத்தம்கூடப் போடக்கூடாது என்று எச்சரித்தார்கள்! அவசியமற்ற எச்சரிக்கை, எவன் வாயைத்திறப்பான்?!குரங்குகள் நம்மைக் கவனித்ததாகவே தெரியவில்லை. ]

வானில் மந்தாகினியாய், வழியே ஜான்வியாய், பகீரதன் தவம் பலித்தபோது பாகீரதியாய், இதோ மலையைவிட்டுச் சமவெளியில் புகும்போது கங்கையாய்ப் பொங்கி வருகிறாள். நாம்காணும் நீருக்குக் கங்கையே மூலம். கரையோரம் கூடச் சங்கிலியைப் ப்டித்துக் கொண்டுதான் குளிக்க வேண்டியுள்ளது. அப்போதும் பறப்பது போல் உடலை விசைக்கிறது அவள் வேகம். என்னென்னெ நம்பிக்கைகளுடன், எங்கெங்கிருந்து எத்தனை எத்தனை மனிதர்கள்! கங்கை, காதல் போல், காந்தம். அழகுக்கும், ஈர்ப்புக்கும் காரணமுண்டோ? விளக்கத்தான் முடியுமோ? விலகத்தான் ஒண்ணுமோ?!

சின்னஞ் சிரிய சிறுமி, கையில் சிறு தட்டுடன் எதிரே நிற்கிறாள். என்னைச் சாய்வாகப் பார்த்து, 'திலகமிடவா?' என்ரு இனிமையாகக் கேட்கிறாள். பதிலுக்குக் காத்திராமல் பிஞ்சு விரலால் சிந்தூரம் குழைத்து பற்றிய நெற்றி குளிரக் குளிர இடுகிறாள். லஹரியில், அவளது பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன். அசையாமல் ஏற்கிறாள். நெகிழ்ந்து கிடந்தவனின் மீது ஒளிப்பார்வை வீசிவிட்டுக் கூட்டத்தில் மறைகிறாள். ரமணன்

No comments: