Sunday, November 19, 2006

<<>>8.ராம்பாடா...!<<>>

8
ராம்பாடா சின்னக் கிராமம்தான். சாலைக்கு இருமருங்கிலும் தேனீர்க் கடைகள்.அங்கங்கே பனிக்கட்டி கரைந்து சிற்றோடைகளாக ஏதோ சேதிசொல்லப் புறப்பட்டசேடிப்பெண்கள் போல ரொம்ப ஒயிலாகத்தான் இங்குமங்கும் சென்றுகொண்டிருந்தன.இளைப்பாறல் அளவு மீறினால் களைப்பாக மாறிவிடும் என்பதை யாத்ரிகள்அறிவார்கள். எனவே, பிரயாசையுடன், தளர்ந்திருந்த உடலை மறுபடிகூட்டிக்கொண்டு, சற்றே கழற்றி வைத்திருந்த கம்பளிக் கவசங்களைத் தட்டிஅணிந்துகொண்டு கிளம்பினோம்.எதிரே, மிக உயரத்தில் எங்கோ ஒரு மலைப்பாதை தெரிகிறது. அதில் நடந்தும்,குதிரைகளிலும் சிலர் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எங்கேபோகிறார்கள் என்ற என் யோசனை என் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்ததோஎன்னமோ, குதிரைப்பயல் சிரித்தபடிச் சொன்னான், 'அதுதான் நாம் போக வேண்டியபாதை,' என்று. தொலைவிலிருந்து பார்க்கும்போது உயரம் பிரமிப்பாகஇருக்கிறது. இதோ இங்கேதான் என்று தோன்றுவன நடக்க நடக்க நம்மைப்பரிகசித்தபடி மேலும் விலகுவதுபோல் தோற்றமளிக்கின்றன.

காலறியாமல்உயர்கிறது பாதை;
கம்பலை போல இறைக்கிறது மூச்சு.
காதறியாத மெளனத்தின்பேச்சு;
கடவுள், தேடினால் கண்ணாமூச்சு!
அட! கவிதைபோல் தொனிக்கிறதே!வளைத்துப் போடுவோமா?காலறியாமல் உயர்கிறது பாதை
கம்பலை போல இறைக்கிறது
மூச்சு காதறியாத மெளனத்தின்
பேச்சுகடவுள், தேடினால் கண்ணாமூச்சு!

பாதை கோரினால் தொலைவு நிச்சயம்
வாதை மிகுந்த பயணம் நிரந்தரம்
கலவியில் இரண்டும் ஒன்றும் இல்லை
கடலுட் சென்றபின் நதியே இல்லை!

ஒவ்வோ ரடியாய் உணர்ந்து நடந்தால்
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு சிகரம்
ஒவ்வொரு சிகரமும் ஒவ்வொரு துவக்கம்
உண்மையில் நடைதான் உயிருக் கிலக்கம்!

சுழன்று கொண்டே இருக்கும் புவியில்
சும்மா இருந்தும் தொடரும் பயணம்
முடிவறியாமல் முதல்புரியாது
முன்னுள் ளவரை பின் தொலையாது

முகவரி யற்ற வீட்டைத் தேடி
தகவ லற்ற தடத்தில் பயணம்
வானம் அதற்கு வாச லென்றபின்
வழிதொலைந்தது; வம்பு தொடர்ந்தது..

ஒளி, மங்கிக்கொண்டே வருகிறது. உதிர்ந்து கிடந்த திரியை,
உணர்வென்னும்காற்று நிமிர்த்தியது. வெட்டவெளியைக் கிழித்துவந்த
சின்னப் பொறியொன்றுதீபத் திலகமாய் வீற்றுச் சிரித்தது. என்னெதிரே காரிருள். எதிர் என்ற கருத்தும் தொலைந்த கருப்பு கப்பிக் கிடக்கிறது. என்னிடம் இருப்பது இதோஇந்தச் சின்னச் சுடர்தான். அதோ அங்கே என்ன இருக்கிறது என்பதை இதனால்தெரிவிக்க முடியாது. ஆனால்,

அடுத்த அடியை எடுத்துவைக்க
அகல்விளக்கு போதும்
எடுத்துவைக்க எடுத்துவைக்க
அடிகள் குறைந்துபோகும்
இறுதி வரையும் எந்தன் தீபம்
சின்னஞ் சிறிதாய் இருக்கும்
இலக்கை அடைந்து அமரும்போது
சற்றே சிரித்து நிலைக்கும்..

நின்ற இடத்திலிருந்து நேரே திரும்பியிருந்தால் என்றோ முடிந்திருக்கும்நடை!

வட்டத்தில், முதலும் முடிவும் ஒன்றுதானே. இருந்த இடத்தில் இருந்தால்போதுமென்பது நடந்து களைத்தால்தானே புரிகிறது!

அலைமோதும் எந்தன் அகவேட்கைக்கும், உடல்நோகும் இந்தப் புறப்பயணத்துக்கும்தான் எத்தனைபொருத்தம்!

இவை இரண்டும் கலந்து தவிர்ந்து போகும் தருணம் புலப்படும்அமைதியாய், அதிசயமாய், அனைத்துமாய் அதோ அசையாமல் வீற்றிருக்கிறது சிவம்!
வீதியற்ற பாதையின் வெளிச்சமற்ற விளக்குகளைத் தாண்டி நாதியற்ற குதிரைகளைவிட்டிறங்கி நமசிவாயனை நினைத்தபடி நகர்த்தப்பட்டேன்..

புடைத்த சிகரமேலிங்கமாய்ப் புலித்தோல் போர்த்துத் திகழ்கிறது..மாறிமாறி அதே இடத்தில்கோவில். தலமே முக்கியம்; கோவிலன்று. காதலுக்குக் கவிதை முக்கியமன்று;காதலுக்குக் காதல்தான் உயிர்; கவிதை உடம்பு. மஞ்சள் விளக்கொளியில் மாறாதகடுங்குளிரில், நெஞ்சைக் கவர்ந்து நினைவெல்லாம் திருடிக்கொண்டு, உயிர்கொஞ்சத் துடிக்கின்ற கோலவெழிலை, குலவக் குலவக் குழைந்து குழைந்து குழையவைக்கும் உயிர்க்கினிய காதற்காந்தத்தை என் கண்ணாரக் கண்டுகொண்டேன்!
வான்அளாவும் நீலமேனி.! வளரும் வெற்பைப் போன்ற சடைகள்! கானமாய்க்கலகலக்கும் கங்கை! கணங்கள் உதிரும் கவி உடுக்கு!தேனவாவும் சுத்த சித்தம்! திரையிலாத புதிரின் உச்சம்!நான்கரைந்தேன் கண்ணின் முன்னே! நான்முடிந்தேன் கவிதை போலே..பிச்சையேந்தும் சாதுக்கள், காலைக்கதிரின் முதற்கிரணங்கள் முத்தமிட்டுப்பொன்துலங்கும் கோவிலுக்குப் பின்னிருக்கும் பனிச்சிகரம், புதிதாய்ப்பாவடை கட்டிக்கொண்ட சின்னஞ் சிறுமியைப்போல் பாறைகளிடையே சலங்கை கொஞ்சக்கலகலத்துவரும் பனியோடை, எங்கோ கேட்கும் உடுக்கு, கண்ணைப் பறிக்கும்நீலம், புன்னகையே முகமாய்க் கடைக்காரர்கள், கஞ்சாப் புகையில் காலம்மக்கிய கனவுமுகம், சாம்பலே ஆடையாய்த் திரியும் துறவி, அந்த இடத்தில்முளைத்த கல்லாய் அசையாது அமர்ந்திருக்கும் அகோரி, தன்னை மீரா என்றுசொல்லிக்கொள்ளும் ஒரு முதிய துறவி, சிறுநாகம்போல் நெளியும் ஜ்வாலைமுன்குறுநகை தவழ வீற்றிருக்கும் நாகா, மூக்கும் கால்களும் மஞ்சளாய்அண்டங்காக்கை, கால்வைக்க முடியாமல் குளிரும் கல்பதித்த பிராகாரம், இளையசூரியனின் கர்வம், கண்கொட்டாமல் நமசிவாயனைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும்நந்தி, ஈரக்காற்றில் மிக நிதானமாய் அசையும் காவிக்கொடி, பரபரப்புடன்உள்ளே நுழையும் பக்தர்கள், எண்ணற்ற பிரார்த்தனைகள், கணக்கற்ற தேவைகள் யாவும் கலந்து ஒன்றான காட்சிதான் நான் கண்ட தரிசனம்.

அங்கே எனக்குக் கோரிக்கைகள் நேரவில்லை. புத்தியைப் பயன்படுத்தி வாக்கியங்களைக் கோத்து விழையும் வரங்கள், முத்தியல்லாமல் வேறேதோ முட்டும் ஆசைகள், அவற்றால் நேரும் குற்ற உணர்வு, இவையெல்லாம் நமக்கே ஒத்துவராதபோது இறைவனைத் தொடுமா?

தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். குமிழிகள் ஒன்றன்பின் ஒன்றாய்உடையவும், விட்டுப் புறப்பட்ட ஆவி ஒரு நடனக்காரியின் லாவண்யத்தோடு வளைந்து நெளிந்து வெளியில் கலக்கவும், என்னை விட்டுப் பிரிந்தன கருத்துக்கள், சித்தாந்தங்கள், அபிப்பிராயங்கள், வேட்கைகள்எல்லாம்....மிடறு விழுங்கிக் கொள்கிறேன். தேனீரின் இளஞ்சூடு நெஞ்சில்பரவுகிறது. நிம்மதியின் உதயத்தில் ஆர்பாட்டம் ஏது?

பனியும், தூசும்சேர்ந்து கப்பிக் கிடக்கும் கண்ணாடி டம்ளர். இருப்பினும், தன்னைத்தொட்டுச் சென்ற கதிரின் கிரணத்தை வாங்கிவைத்துக்கொண்டு மகிழ்வில்ஒளிர்கிறது; புதிய முத்தம் பெற்ற பழைய கைதிபோல்!எழுந்தேன்.

தும் துது தும் தும் துது தும் என்று பெரிய பறை முழங்குகிறது.மிகப்பெரிய தாரையில் மெல்லிய ஒலி வருகிறது. எங்கிருந்தோ வந்த பக்தர்கள் ஒரேவிதமாக, பதட்டமில்லாத ஆட்டத்தில் ஈடுபட்டுத் தன்வயம் இழந்தவர்களாகக் கண்கள் மேலே செருகக் காட்சியளிக்கிறார்கள். இன்றைய கலைநடனம் என்பது அந்தவெட்டவெளி நடனத்தின் அற்பப் பிரதிபலிப்புத்தான் என்ற குருநாதரின் வார்த்தை காதில் கேட்கிறது. சாதித்த உணர்வில்லை; சாதிக்கும் வெறியுமில்லை. ஏக்கமில்லை. ஏற்றஇறக்கங்கள் இனியுமில்லை. அவனாய்க் கிளம்பி, இவனாய்த் திரிந்து சிவனில்கலந்தது சித்தம்.திரும்பி வந்தால்தானே திரும்பிவந்த கதையைச் சொல்ல முடியும்?

OoO.முற்றும்.OoO

<<>> 7. கெளரிகுண்டம்...!.<<>>

7

னமென்னும் குகை வாயில். அதன் இருட்டுக்கும், வாசல் வெளிச்சத்துக்கும் நடுவே அமர்ந்திருக்கிறான் மனிதன். விட்டத்தில் பிரும்மாண்டமான தேனடை. கருத்த தேனீக்களின் பெருத்த சுருதி. ஒற்றுமை, ஒரேயொரு ராட்சதத் தேனீ மட்டும் பாடுவதுபோல் தொனிக்கிறது. குகையின் தண்மை, பாதுகாப்பு, மெளனம் இவற்றுக்கு மெருகூட்டுவது போல்தான் ஒலிக்கிறது சுருதி. உறக்கம், விழிப்பு, இவற்றின் மத்தியிலே உள்ளவொரு மர்மமான, இடைஞ்சலான தறுவாயில்தான் இருக்கிறான். உள்ளே ஆயிரமாயிரம் தேனீக்களாலும் கலையாத மெளனம். வெளியே ஆரவாரத்தின் தாழ்வாரம். ஒரு விபத்தைப்போல், புலன்கள் வழியே புறத்தே சிதறுகிறான்... ம்.ம்..தேனடையில் கல்லெறிந்த பின்னே திசைகளை வசைபாடி என்னபயன்?

லயம் கலைந்து, விழுங்கத் தயாராயிருக்கும் புறவொலிகளைக் கருத்தின்றிக் காண்கின்றேன். வந்துவிட்டது கெளரிகுண்டம். கந்தக (வென்னீர்) ஊற்று; சற்று அதில் உட்கார்ந்து எழுந்திருந்தால், பாட்டி சொல்வதுபோல், உடம்பு சொடக்குவிட்டாற் போலிருக்கும். கெளரி தேவிக்கு ஒரு சின்னக் கோவிலிருக்கிறது. இங்கிருந்து கேதார் 14 கி.மீ. படிப்படியாக உயர்ந்து 12,000 அடி உயரத்தைத் தாண்டும் மலைப்பாதை. ஏராளமான குதிரைகள்; அவை கோவேறு கழுதைகளே! சென்று வர, ரூ 700 - 900. 'டோலி' அல்லது 'டண்டி' எனப்படும் சின்னப் பல்லக்கு. நாலுபேர் சுமந்து செல்வார்கள், உயிரோடு! ரூ 2000 - 2700. குதிரையில் ஏறினால் முதுகு, பிருஷ்டம், கால்கள் இவையெல்லாம் மாநில சுயாட்சி பெற்றுவிடும்! 'டோலி?' முதுமக்கள் தாழியில் சிறப்புக் குலுக்கல் நடைபெற்றது போல், எலும்புப் பொட்டலமாகத் திரும்பி வரலாம்! இதைவிட வானப்ரஸ்தமே மேலென்று சில தைரியசாலிகள் நடக்கத் துவங்கி விடுகிறார்கள்.

கழுதை ஏறினான் கோ! இனி, ஒட்டகம், ஆனை, நெருப்புக்கொழி எதில்வேண்டுமானாலும் சவாரிசெய்ய முடியும் என்கிற ஞானம் இரண்டொரு நிமிடங்களிலேயே சித்தித்து விடுகிறது! பாதையைச் செப்பனிடுகிறோம் என்று பாளம்பாளமாகக் கருங்கல் போட்டிருக்கிறார்கள். அதிலே ஏறியிறங்கப் படாதபாடு படுகிறது குதிரை. திடீரென்று அதன் முன்னங்கால்கள் வழுக்க, நமக்கு இதயம் தொண்டையில் வர..சாமி ஏன் சவுகரியமான இடத்தில் இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது!

மூன்று குதிரைகளுக்கு இரண்டு பயல்கள். குதிரையைப் பிடித்தபடி, பொருட்களைக் கவனித்தபடி, நம்மையும் பார்த்துக்கொண்டு, இந்தக் கடுமையான பாதையில் ஏறியிறங்க வேண்டும். வெகுளி மனம்; வெள்ளைச் சிரிப்பு; பரம ஏழ்மை. இமயத்தின் பலபகுதிகளிலும் இதேபோல், மலைவாழ் மக்கள் வறுமையில்தான் இருக்கிறார்கள். குதிரைக்காரன் பயல்களுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தால் அதிகம். அதுவும் ஆறுமாதங்கள்தான். குளிர்காலத்தில் கோவில் அடைக்கப்படுகிறது. எந்த அரசாங்கமும் இவர்களைக் கவனிப்பதில்லை. உள்நாட்டிலோ பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி என்று 'ஏழைகளை மேம்படுத்தும்' திட்டங்கள்!! கொள்ளைகள்! மலைவாழ் மக்களோ வறுமைப் பள்ளத்தாக்கில். இப்படிச் செய்துதான், வடகிழக்குப் போயேவிட்டது. இந்தப் பகுதியும்..ஐயோ நினனத்தாலே மனம் நடுங்குகின்றது.

நமக்குப் பலவகையான உணவு; இவர்களோ இரண்டு ரொட்டி கிடைத்தால் போதுமென்கிறார்கள். உடுக்கப் பலவிதமான உடைகள் நமக்கு; இவர்களோ உடுத்ததைக் கழற்றியதே இல்லையோ என்னும்படித் தோற்றமளிக்கின்றனர். நமக்கு இருக்க அழகான இல்லம்; இவர்கள் இருப்பதோ குப்பைக்கொட்டாய். சுகங்களில், எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் பிரச்சினை. அவர்களுக்கோ வாழ்க்கையே ஒரு பிரச்சினைக் களஞ்சியம். இவர்களிடம்போய்ப் பேரம் பேசும் நம்மவர்களைப் பார்க்கும்போது குமட்டிக்கொண்டு வருகிறது...

குதிரைச் சவாரியில் வலியே மேலென்று தோன்றவைக்கும் சில விபரீதங்கள் உள்ளன என்பதை விழிபிதுங்கப் புரிந்து கொண்டேன்! மூன்று குதிரைகள் என்றேனா? அவற்றில் இரண்டு ஜோடி; ஒன்று இடைச்செருகல். தன்காதலன் அல்லது காதலி கூடவராமல் அடுத்த அடியை எடுத்து வைக்காது ஜோடி! அது வந்து சேர்ந்தவுடன், முகர்தல், முத்தமிடல், சிரிப்பு இவவயெல்லாம் நடந்து முடியக் கொஞ்ச நேரமாகும். எவனும் அசைக்க முடியாது. பயல், அவற்றோடு மன்றாடிக் கொண்டிருப்பான். இதைக் கண்ணுற்ற மூன்றாம் குதிரை, மனமுடைந்து ஆறடி அகல மலைப்பாதையின் விளிம்புக்குச் சென்று, கீழே 4000 அடிப் பள்ளத்தில் ஓடும் நதியில் விழுந்துவிடலாமா என்று யோசித்தபடி குனியும். ஐயன்மீர்! எப்போதும் நான்தான் அந்த மூன்றாம் கழுதைக் கோ! ஆஹா! எல்லா வேதாந்த சித்தாந்த ஞானமும் நொடிப்பொழுதில் விடைபெற்றுக்கொண்டு பறக்க, இதுவரை இல்லாத பக்தியுடன் கேதார நாதரைத் துதித்தபடி நான் உறைந்துபோக, சற்றும் பதறாமல் சிரித்தபடி வந்து மெல்ல இழுத்துச் செல்கிறான் எழுதப் படிக்கத் தெரியாத ஏழைச் சிறுவன்...

ராம்பாடா கிராமம் வந்துவிட்டது. சரியாகப் பாதித் தொலைவில் இருக்கிறது. இங்குதான் நாம் களைப்பாறுகிறோம்; குதிரைகள் கட்டுப் புல் தின்று நீரருந்திச் சேணமின்றி இளைப்பாறுகின்றன. பயல்களெல்லாம் விரிந்த விழிகளோடு அண்டப் புளுகுக் கதைகளைச் சொல்லியபடியே தேனீர் அருந்திக் கொள்வார்கள். அடுத்த 'ரீலை' அளந்துவிடத் துடிக்கிறான் அடுத்தவன்!

ரமணன்...

<<>>ஆன்ம விடுதலை...!<<>>

6

ஹர் த்வாரில் கங்கையில் குளிக்கும்போது, மூன்று பிரார்த்தனைகள் செய்து மும்முறை மூழ்கச் சொன்னார்கள். ஒன்று, நமக்காக; இரண்டு, சுற்றமும் நட்பு; மூன்றாவது, நாட்டு நலனுக்காக. சமுதாயம் நலமாக இருந்தால்தான் நாம் நலமாக வாழ முடியும். நமது நலம், சமுதாய நலனையே பெரிதும் சார்ந்திருக்கிறது. இதை அழுத்தமாக எனக்கு விளக்கிய என் குருநாதர், "சமுதாயத்தில் வாழும்வரை நாம் கடன்பட்டுள்ளோம். அதன் நன்மைக்காகப் பணியாற்றுவதன் மூலமே அதை ஓரளவு தீர்க்க முடியும். காட்டுக்குச் சென்று தனிமையில் இருப்பின், கடமைகள் கிடையாது. ஆனால், சமூகத்தில் வாழும்மட்டும், ஒரு குடிமகனின் பொறுப்பாய கடமையிலிருந்து சன்யாசிக்கும் விலக்குக் கிடையாது. இந்தப் பொறுப்பை நிர்வகிக்காமல், முக்தி விழைவது, பகற்கனவே!'

நாட்டுப் பற்றுடன் சமூகக் கடமை ஆற்றியபடி வாழ்வதே தவம்; வேறெதையும் செய்யாமலேயே அவன் ஆன்ம விடுதலை பெறுவான் என்று அவர் ஆணித்தரமாகச் சொல்லுவார். அதைப்பலர் ஏற்பதில்லை. அதுபற்றி, அவருக்கோ எனக்கோ அக்கறையில்லை!

கேதாரப் பயணம், ருத்திரப் பிரயாகையிலிருந்துதான் களைகட்டுகிறது. இங்கே, ஒருவன் ஆன்ம விடுதலையே கோரும்படித் தூண்டப்படுகிறான். விடுதலை என்பது ஒருகணத்தின் முனைப்பில் நிகழ்வது. அதிலே, செயல், காலம் எதுவுமில்லை. ஆனால் அந்தக் கணத்தை நோக்கி வாழ்வதற்கு, ஒரு பிரத்யேகமான மனப்பாங்கும், பயிற்சியும் தேவையாகிறது; அதைக் காலம் நிர்வகிக்கிறது.

பரீட்சித்துக்கு முடிசூட்டிவிட்டுப் பாண்டவர்கள் அத்தினாபுரத்திலிருந்து நடந்து இங்கே வந்தார்கள். ரு.பி.லிருந்து, அவர்கள் நீரை மட்டுமே உட்கொண்டு நடந்தார்கள். இடைவிடாத நடை. கேதாரநாதனைத் தவிர வேறெதும் விழையாத மனநிலை. திரும்பிப் பாராத துறவு. எண்ணங்கள் ஓய்ந்த மனம். நடைதொடர்ந்து உடல் கீழே விழும். ஆன்ம விடுதலை நேரும். இதற்குப் பெயரே வானப்ரஸ்தம்.

சமீபகாலம் வரையிலும் யாத்திரைக்குச் செல்பவர்கள் திரும்பிவர டிக்கெட்டு எடுப்பதில்லை! இப்போது உறுதி நீர்த்துவிட்டது. இருந்தும் குற்றமில்லை.


கேதார் என்றால் மலைச்சிகரம் என்று பொருள். புராணத்தில், இது 'முக்கண்டி' அதாவது மூன்றாம்கண் என்று வர்ணிக்கப் படுகிறது. கேட்டதைத் தரும் கற்பகத்தரு என்ற பொருளிலும் வழங்கப் படுகிறது. ஆனால், இங்கே கேட்கவேண்டியது முக்தி மட்டுமே! மனம், ஓரிலக்கில் தீவிரம் கொண்டபின்னே, உடல் முன்னே தள்ளப்படுகிறது. உடலின் துவட்சியும் ஓர் இனிய மனநிலையாகப் பரிமளிக்கிறது. சிந்தனைகள் ஓய்ந்து சித்தத்தில் சில்வண்டின் சீழ்க்கை கேட்கிறது. வானளாவிய அமைதி வண்ணமலராய் உள்ளிருந்து விரிகிறது.


வாழ்க்கை முடிகிறது.. வாழ்தல் தொடர்கிறது..



ரமணன்...

Wednesday, November 15, 2006

<<>>அலக்னந்தாவும், மந்தாகினியும்...5<<>>

5 கேதார யாத்திரையின் துவக்கம் ஹர் த்வார். ஆனால்,
கங்கைக் குளியலில் எல்லாமே மறந்துபோய் விடுகிறது.
பெரிய தொன்னைகளில், பெண்கள் மலர்கள், விளக்கு
ஆகியவற்றை ஏந்திப் பிரார்த்தனை செய்தபடி கங்கையில் விடுகிறார்கள். ஏதேதோ ஊர்களிலிருந்து வந்திருக்கும்
அவர்களைப் பார்த்தாலே 'பராசக்தி!' என்று பரவசமாய்க்
கூவத் தோன்றுகிறது. இவர்கள் எதற்காகக் கோவிலுக்குச்
சென்று கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள்?

கண்ணாடி பார்த்தால் போதாதோ? இதைக்கேட்கவும் செய்தேனே! ஆ! அந்த அட்டைக் கறுப்புக் கன்னங்களில் எங்கிருந்து வந்து தோன்றி நெளிந்ததோ ஒரு நாணச் சிவப்பு மின்னல்!! உணர்ச்சி வசப்பட்டுச் சொல்லவில்லை; உள்ளார்ந்த உணர்வோடு சொல்லுகிறேன்: பெண்மை சிறப்பிக்கப்படும் வரை, இந்த நாட்டில் அறமும், அன்பும், வீரமும் தழைக்கும். இருட்டை விலக்குகிறோம் என்ற உணர்வு விளக்குக்கு இருப்பதில்லை. அதுபோலத்தான் பாரத நாட்டுப் பெண்கள். ஏன், அவர்கள் அடக்கப்படுவதில்லையா? அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதில்லையா? என்றெல்லாம் கேள்விகள் எழலாம். அவை நியாயமாகவும் இருக்கலாம். இந்தக் கூட்டங்கள், கோஷங்கள், அறிக்கைகள், கோபங்கள் எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கிவைத்து விட்டு கங்கைக்கு வாருங்கள் என்று கனிவோடு அழைக்கிறேன்.


அங்கே, அங்கிருந்து புரிந்து கொள்வீர்கள் நான் என்ன சொல்கிறேன் என்று! விடுதலை என்பது சில இடங்களில் கேட்டு வழங்கப்படுவது; சில இடங்களில் போராடிப் பெறப்படுவது. ஆனால், இந்தியப் பெண்ணைப் பொறுத்தமட்டில், அது உணரப்படுவது, நினைவுகூரப்படுவது! மோழையிலே பொறியாகக் காணப்படுவதுதான் ஊழியிலே கூத்தாக எழுந்து நிற்கிறது! பெண்மையின் கொடையில் பிழைப்பதுதான் ஆண்மை. இந்தியப் பெண் என்று தன்னை உணர்கிறாளோ, அன்று தருமத்திற்குப் பொன்னாள்! தரணிக்கெல்லாம் நன்னாள்! ஒன்று சொல்லவா? கல்வியில்லாத எத்தனையோ பெண்மணிகள் கண்திறந்துதான் இருக்கிறார்கள்! கங்கை போலவே கனலும் புனலுமாகவும் கைவிளக்காகவும் காவல் தெய்வமாகவும் அன்றாட வாழ்க்கையின் நடைக்கு அச்சாணியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கல்விமான்கள் அல்ல கல்விச்சாலைகள்! கங்கையின் களியாட்டத்தில் களைப்பு தீர்ந்தது.

உடல்மட்டுமல்ல, உள்ளமும் இளைப்பாறியது. ஆசுவாசத்தில் நேர்ந்த ஆயாசத்தை ரசித்தபடிப் படியேறி வந்தேன். ஒரு பெண்மணி தேனீர் விற்கிறாள். கன்னங்கறுத்த முகம்; மின்னற் சிரிப்பு; உடுக்கள் போற் கடுக்கன்கள்; உல்லாச நிலவாய் மூக்குத்தி. பத்துப்பேரைப் பந்தாடும் வலிய தேகம். பேச்செல்லாம் பசுமழலை! 'சகோதரி! இங்கே உட்காரலாமா?' என்றதும் பதறிவிட்டாள். "அதென்ன அப்படிக் கேட்கிறீர்கள்? அதற்காகத்தானே பெஞ்சு போட்டிருக்கிறது!" அற்புதமான தேனீர் கொடுத்தாள். நெஞ்சில் இறங்கும் இளஞ்சூட்டை ரசித்தபடியே அவளிடம் கேட்டேன், 'அதெப்படி உன்னால் இவ்வளவு பிரககசமாகச் சிரிக்க முடிகிறது?' சற்றே வெட்கப்பட்டுச் சுதாரித்துக்கொண்டு சொன்னாள் 'செய்ய வேண்டியதைச் செய்கிறேன். நடக்க வேண்டியதை அவன் பார்த்துக் கொள்வான். நல்லது கெட்டது அவனுக்குத் தெரியாதா? இல்லை, நமக்குத்தான் புரியாதா? அட, சிட்டுக் குருவியின் தாகத்தைத் தீர்க்கத் தெரியாதா கங்கைக்கு?!' என்று சோழி குலுங்கச் சிரித்தபடி, மங்கிய ஸ்டவ்வை மறுபடி விசைத்தாள். நான் வியப்பில் உறைந்தேன்.


இந்திய நாட்டின் சராசரிக் குடிமகனுக்கு மதம் தெரியாது; ஆனால், அதைத் தாங்கும் தத்துவம் தலைகீழ்ப்பாடம்! பெண்ணின் தாத்தா வந்தார். \'குளிப்பது கங்கையில். குடிப்பது கங்கையை. வாழ்வது கங்கைக் கரையில்; எனக்கு நோய் கிடையாது; வரவும் வராது,\' என்றபடிப் படித்துறையில் இறங்கிச் சென்றார். ஏதோ, சம்பிரதாயத்துக்காக என்னிடம் காசுவாங்கிக்கொண்டு, அடுப்பைச் சுற்றித் திருஷ்டி கழித்து இடுப்பில் செருகிக் கொண்டாள். கிளம்ப வேண்டிய நேரம். மொத்த இடமும் தனதே என்ற மதர்ப்புடன் திரியும் காளை மாடுகள், விவரிக்க முடியாத வெற்றியைப் பறைசாற்றுவதைப்போலக் காற்றில் நீண்டு படபடக்கும் சேலைகள், இழந்துவிட்ட பெற்றோரை எண்ணிக் கண்மல்கிச் சடங்குசெய்யும் பிள்ளை, வரப்போகும் வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என்று மனமுருகிப் பிரரர்த்தித்து முக்காடிட்டுக் கொள்ளும் பேரழகுப் பெண்கள், வாழ்வின் இறுதிவிளிம்பில் பத்திரிகையில் ஏதோ உற்றுப் படித்துக்கொண்டிருக்கும் முதிய விழிகள், தேவைகள் தீர்ந்தும், வாழ்க்கை தீராத திகைப்பில் அமர்ந்துகொண்டிருக்கும் சாதுக்கள், குளிக்கப் பயப்படும் குழந்தை, அதை அதட்டி இறக்கும் தந்தை, பின்பு மறுபடி ஏற மறுக்கும் குழந்தை, அதைப் பார்த்துச் சிரிக்கும் அன்னை, இரும்புக் கிராதியைத் தாண்டி நீச்சலிடும் துணிச்சல் மிக்க சீக்கிய இளைஞர்கள், இவைபோன்ற எத்தனையோ காட்சிகளுக்குப் பாத்திரமான கங்கை, சாட்சியான மணிக்கூண்டு, இவற்றைப் பார்த்தபடி நடந்தால், கங்கைக்கு ஆரத்தி காட்டும் காட்சியைக் கண்டு அப்படியே நின்றேன்!

கரையில் கங்கா தேவிக்குச் சின்னக்கோவில். காலையிலும் , மாலையிலும் அடுக்கடுக்கான தீபங்களுடன், பின்னே ஆரத்தி கீதமும், வாத்தியங்களும் முழங்க, நதிக்கு ஆரத்தி காட்டுகிறார்கள். அப்போது, பெண்களெல்லாம், சின்னச் சின்னத் தீபங்களைத் தொன்னையில் ஏற்றி கங்கையில் விட்டு, அவை செல்லும் திசையைப் பார்த்தபடி நிற்கிறார்கள்!

எத்தனைக் கனவுகள் விண்ணப்பங்களாகச் சிறகு முளைத்துச் செல்லுகின்றனவோ! ஆரத்தி முடிந்து, எல்லோரும் எல்லாம் நிறைவேறியது போன்றொரு நிம்மதியோடு கலைகிறார்கள்.
ஹர் த்வாரிலிருந்து அண்மையிலிருக்கிறது ரிஷிகேஷ். மலைப்பாதை அதற்குள்ளாகவே துவங்கி விடுகிறது. அங்குள்ள ஆச்ரமங்கள், அந்தத் திருத்தலத்தின் சிறப்புக்கள் இவற்றைச் சொல்லி முடியாது. இருந்து அனுபவிப்பதற்காகப் போகும்போது ஹர் த்வாரிலும், வரும்போது ரிஷிகேஷிலும் தங்குகிறார்கள் யாத்ரிகள். ]

இந்திய நாட்டின் சராசரிக் குடிமகனுக்கு மதம் தெரியாது; ஆனால், அதைத் தாங்கும் தத்துவம் தலைகீழ்ப்பாடம்! பெண்ணின் தாத்தா வந்தார். 'குளிப்பது கங்கையில். குடிப்பது கங்கையை. வாழ்வது கங்கைக் கரையில்; எனக்கு நோய் கிடையாது; வரவும் வராது,' என்றபடிப் படித்துறையில் இறங்கிச் சென்றார். ஏதோ, சம்பிரதாயத்துக்காக என்னிடம் காசுவாங்கிக்கொண்டு, அடுப்பைச் சுற்றித் திருஷ்டி கழித்து இடுப்பில் செருகிக் கொண்டாள். கிளம்ப வேண்டிய நேரம். மொத்த இடமும் தனதே என்ற மதர்ப்புடன் திரியும் காளை மாடுகள், விவரிக்க முடியாத வெற்றியைப் பறைசாற்றுவதைப்போலக் காற்றில் நீண்டு படபடக்கும் சேலைகள், இழந்துவிட்ட பெற்றோரை எண்ணிக் கண்மல்கிச் சடங்குசெய்யும் பிள்ளை, வரப்போகும் வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என்று மனமுருகிப் பிரரர்த்தித்து முக்காடிட்டுக் கொள்ளும் பேரழகுப் பெண்கள், வாழ்வின் இறுதிவிளிம்பில் பத்திரிகையில் ஏதோ உற்றுப் படித்துக்கொண்டிருக்கும்
முதிய விழிகள், தேவைகள் தீர்ந்தும், வாழ்க்கை தீராத திகைப்பில் அமர்ந்துகொண்டிருக்கும் சாதுக்கள், குளிக்கப் பயப்படும் குழந்தை, அதை அதட்டி இறக்கும் தந்தை, பின்பு மறுபடி ஏற மறுக்கும் குழந்தை, அதைப் பார்த்துச் சிரிக்கும் அன்னை, இரும்புக் கிராதியைத் தாண்டி நீச்சலிடும் துணிச்சல் மிக்க சீக்கிய இளைஞர்கள், இவைபோன்ற எத்தனையோ காட்சிகளுக்குப் பாத்திரமான கங்கை, சாட்சியான மணிக்கூண்டு, இவற்றைப் பார்த்தபடி நடந்தால், கங்கைக்கு ஆரத்தி காட்டும் காட்சியைக் கண்டு அப்படியே நின்றேன்!

கரையில் கங்கா தேவிக்குச் சின்னக்கோவில். காலையிலும் , மாலையிலும் அடுக்கடுக்கான தீபங்களுடன், பின்னே ஆரத்தி கீதமும், வாத்தியங்களும் முழங்க, நதிக்கு ஆரத்தி காட்டுகிறார்கள். அப்போது, பெண்களெல்லாம், சின்னச் சின்னத் தீபங்களைத் தொன்னையில் ஏற்றி கங்கையில் விட்டு, அவை செல்லும் திசையைப் பார்த்தபடி நிற்கிறார்கள்! எத்தனைக் கனவுகள் விண்ணப்பங்களாகச் சிறகு முளைத்துச் செல்லுகின்றனவோ! ஆரத்தி முடிந்து, எல்லோரும் எல்லாம் நிறைவேறியது போன்றொரு நிம்மதியோடு கலைகிறார்கள். ஹர் த்வாரிலிருந்து அண்மையிலிருக்கிறது ரிஷிகேஷ். மலைப்பாதை அதற்குள்ளாகவே துவங்கி விடுகிறது. அங்குள்ள ஆச்ரமங்கள், அந்தத் திருத்தலத்தின் சிறப்புக்கள் இவற்றைச் சொல்லி முடியாது. இருந்து அனுபவிப்பதற்காகப் போகும்போது ஹர் த்வாரிலும், வரும்போது ரிஷிகேஷிலும் தங்குகிறார்கள் யாத்ரிகள்.

இரண்டு நதிகள் சேர்ந்து பிறகு தொடரும் இடம் பிரயாகை. இங்கே, சாலையில் நின்றபடிப் பார்த்தால், கீழே பள்ளத்தாக்கில், ஆர்ப்பரிக்கும் அலக்னந்தாவும், அமைதியான பாகீரதியும் கலப்பதைக் காணலாம். பாகீரதி கரும்பச்சை. அலக்னந்தா வெண்ணுரை தெறிக்கும் பழுப்பு. மிகுந்த பிரயாசையுடன் கீழே இறங்கி, அதிகமாய்ப் பாதுகாப்பில்லாத படித்துறையில், கால்வைத்தால் கோடித் தேள்கொட்டும் குளிர்நதியின் பரிகாசச் சுழலில் குளித்தால் வெற்றி!


நாம் பயந்த பயமெல்லாம் மறந்துபோய், அடுத்துக் குளிக்க வருபவர்களுக்கு நாம் சொல்லும் தைரியம் இருக்கிறதே!! \n இரண்டு ரொட்டி, கொஞ்சம் கூட்டு; அதற்கு மேல் தேவையில்லை. 50 வயதுக்கு மேல் பாதி, 60 வயதுக்கு மேல் மூன்றில் ஒருபங்கு, 70க்கு மேல் உயிர்நிற்கத் தேவையான அளவு, மட்டுமே உண்ணவேண்டும். அதிகக் காரமில்லாத உணவே சாதனைக்கு ஏற்றது. நதி நீரைத் தாராளமாகக் குடிக்கலாம். பாட்டிலில் வாங்கத் தேவையில்லை. தாதுக்கனிகள் அதிகமிருப்பதால், சிலருக்கு சற்றே வயிற்றில் கடகடப்பு உண்டாக்கலாம். ருத்ரப் பிரயாகையில் இரவுத்தங்கல். இங்கே அலக்னந்தாவும், மந்தாகினியும் கலக்கின்றன. இங்கும் வேகத்திற்கோ, குளிருக்கோ, அச்சத்திற்கோ பஞ்சமில்லை! சின்ன விடுதி. சித்திரப் பூக்கள்! அவற்றில் வந்தமரும் தேனீக்கள். சோறும் பருப்பும் காயும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. மேல்மாடிக்கு வந்தால், நெடிய மலைத்தொடர் நேருக்கு நேரே நின்றுகொண்டு 'நலமா?' என்கிறது. இருளின் கருமையிலும், வானத்தின் நீலத்தின் பிடிவாதம் பிரமிக்க வைக்கிறது. சற்றே முந்தி வந்த முழுநிலவும், கோள்களும், நட்சத்திரங்களும் வெல்வெட்டுக் கம்பளத்தில் ரத்தினங்களைப் பதித்ததுபோல் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் மீறி ஓர் அமைதி. காட்டிலிருந்து வரும் சுவர்க்கோழிச் சீழ்க்கை, அந்த அமைதிக்குப் பங்கமில்லாமல், அதன் ரீதிக்குத் தோதாக அமைகிறது. புறத்தே எழுந்த மெளனத்தின் நாதம் அகத்தே புகுந்துகொள்கிறது. மண்டையெங்கும் மெளனராகம். எண்ணங்கள் நின்றுபோய்ப் புலன்களெல்லாம் ஒருமித்து ஒரேதிசையை நோக்கிக் கூர்த்திருக்கின்றன. இனி யாரிடமும் பேசுவதற்கில்லை. மெல்ல அறைக்குள் சென்று அதன் இருட்டை ரசித்தபடி, கம்பளிக்குள் அமிழ்ந்தேன். எனக்குள்ளே கவிழ்ந்தேன்... !

வளைந்து வளைந்து செல்கிறது பேருந்து. கற்பனைக்கெட்டாத வெற்புகள். எத்தனை அழித்தும் இன்னும் மிஞ்சியிருக்கும் காடுகள். அவற்றின் பிரத்யேக வாசத்தைச் சுமந்துவந்து தலைகோதும் குளிர்காற்று. மனதில் ஏதேதோ பல்லவிகள். தலைசுற்றலில் யாரோ ஒரு பெண் வாந்திஎடுக்க, உடனே தொடர்ந்து பலதலைகள் சன்னலுக்கு வெளியே முயல,,வந்துவிட்டது தேவப் பிரயாகை. இரண்டு நதிகள் சேர்ந்து பிறகு தொடரும் இடம் பிரயாகை. இங்கே, சாலையில் நின்றபடிப் பார்த்தால், கீழே பள்ளத்தாக்கில், ஆர்ப்பரிக்கும் அலக்னந்தாவும், அமைதியான பாகீரதியும் கலப்பதைக் காணலாம்.

பாகீரதி கரும்பச்சை. அலக்னந்தா வெண்ணுரை தெறிக்கும் பழுப்பு. மிகுந்த பிரயாசையுடன் கீழே இறங்கி, அதிகமாய்ப் பாதுகாப்பில்லாத படித்துறையில், கால்வைத்தால் கோடித் தேள்கொட்டும் குளிர்நதியின் பரிகாசச் சுழலில் குளித்தால் வெற்றி! நாம் பயந்த பயமெல்லாம் மறந்துபோய், அடுத்துக் குளிக்க வருபவர்களுக்கு நாம் சொல்லும் தைரியம் இருக்கிறதே!!

இரண்டு ரொட்டி, கொஞ்சம் கூட்டு; அதற்கு மேல் தேவையில்லை. 50 வயதுக்கு மேல் பாதி, 60 வயதுக்கு மேல் மூன்றில் ஒருபங்கு, 70க்கு மேல் உயிர்நிற்கத் தேவையான அளவு, மட்டுமே உண்ணவேண்டும். அதிகக் காரமில்லாத உணவே சாதனைக்கு ஏற்றது. நதி நீரைத் தாராளமாகக் குடிக்கலாம். பாட்டிலில் வாங்கத் தேவையில்லை. தாதுக்கனிகள் அதிகமிருப்பதால், சிலருக்கு சற்றே வயிற்றில் கடகடப்பு உண்டாக்கலாம்.

ருத்ரப் பிரயாகையில் இரவுத்தங்கல். இங்கே அலக்னந்தாவும், மந்தாகினியும் கலக்கின்றன. இங்கும் வேகத்திற்கோ, குளிருக்கோ, அச்சத்திற்கோ பஞ்சமில்லை! சின்ன விடுதி. சித்திரப் பூக்கள்! அவற்றில் வந்தமரும் தேனீக்கள். சோறும் பருப்பும் காயும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. மேல்மாடிக்கு வந்தால், நெடிய மலைத்தொடர் நேருக்கு நேரே நின்றுகொண்டு 'நலமா?' என்கிறது. இருளின் கருமையிலும், வானத்தின் நீலத்தின் பிடிவாதம் பிரமிக்க வைக்கிறது. சற்றே முந்தி வந்த முழுநிலவும், கோள்களும், நட்சத்திரங்களும் வெல்வெட்டுக் கம்பளத்தில் ரத்தினங்களைப் பதித்ததுபோல் தோன்றுகிறது. எல்லாவற்றையும் மீறி ஓர் அமைதி. காட்டிலிருந்து வரும் சுவர்க்கோழிச் சீழ்க்கை, அந்த அமைதிக்குப் பங்கமில்லாமல், அதன் ரீதிக்குத் தோதாக அமைகிறது. புறத்தே எழுந்த மெளனத்தின் நாதம் அகத்தே புகுந்துகொள்கிறது. மண்டையெங்கும் மெளனராகம். எண்ணங்கள் நின்றுபோய்ப் புலன்களெல்லாம் ஒருமித்து ஒரேதிசையை நோக்கிக் கூர்த்திருக்கின்றன. இனி யாரிடமும் பேசுவதற்கில்லை. மெல்ல அறைக்குள் சென்று அதன் இருட்டை ரசித்தபடி, கம்பளிக்குள் அமிழ்ந்தேன். எனக்குள்ளே கவிழ்ந்தேன்...

ரமணன்.

<<>>சிட்டுக் குருவியின் தாகம்...4<<>>

4. ஹரித்வாரா? ஹரத்வாரா? அது ஹர் த்வார்; எனில், அனைத்துக்கும் வாயில். பத்ரி, கேதார் மட்டுமன்றி, ரிஷிகேஷிலிருந்து துவங்கிப் பலப்பல திருத்தலங்களுக்குத் தலைவாசலாக விளங்குகிறது ஹர் த்வார். (ஹர் = அனைத்துக்கும் த்வார் = வாயில்) எத்தனையோ அமைப்புகளின் ஆச்ரமங்கள் உள்ளன. தங்குவதற்குக் கணக்கற்ற விடுதிகள் உள்ளன. கட்டணங்கள் மலிவுதான். ஏராளமான உணவு விடுதிகள். ஆலு பராட்டாவும் தயிரும், சுடச்சுட குலாப் ஜாமுனும் ஆஹா! எத்தனையோ படித்துறைகள் இருந்ததலும் 'ஹர் கி பெளடி' அதாவது 'ஹரியின் பாத தூளி' என்னும் கட்டம் மிகவும் பிரசித்தியானது. கட்டவிழ்ந்து ஓடும் கங்கை, யாத்ரிகளின் வசதிக்காகத் தேக்கித் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. பழைய மணிக்கூண்டு அலங்கரிக்கும் ஒரு நீளத்திடல் கங்கையை இரண்டாகப் பிரிக்கிறது. இடப்புறம், பிரம்மதீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. அங்கே பெரும்பாலும் இறந்தவர்களுக்கான சடங்குகள் செய்கிறார்கள். பண்டாக்கள் பிடுங்கித் தின்கிறார்கள் என்பதெல்லாம் பொய். க்ரெடிட் கார்டு, செல்பேசிக்காரர்களைக் காட்டிலும் எதுவும் கொடுமையாக இல்லை. அவரவர் வசதிக்கேற்பச் சடங்குகள் செய்துகொள்ளலாம். பாதையிலிருந்து இறங்கிப் படித்துறைக்குச் செல்லவேண்டும். எப்போதும் கூட்டமாக இருக்கும் குறுகிய சாலைகள். திடீரென்று மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப்போய், மக்கள் முகங்களில் பீதி கலந்த பிரகாசம். என்னவென்று பார்த்தால், பிரம்மாண்டமான குரங்குகள் சாரிசாரியாக மட்டுமன்றி, ஜோடிஜோடியாகக் கைகோத்துக்கொண்டு சாலையைக் கடந்துகொண்டிருந்தன. யாரும் சத்தம்கூடப் போடக்கூடாது என்று எச்சரித்தார்கள்! அவசியமற்ற எச்சரிக்கை, எவன் வாயைத்திறப்பான்?!குரங்குகள் நம்மைக் கவனித்ததாகவே தெரியவில்லை.
வழியெங்கும் பிச்சை கேட்கிறார்கள். சாதுக்கள் அமர்ந்திருக்கிறார்கள். பார்வை சந்தித்தால் பார்வையாலேயே கேட்கிறார்கள். பாரதியின் அச்சமில்லைப் பாட்டில், \'பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்...\' என்றொரு வரி வருகிறது. நம்நாட்டில், பிச்சையெடுத்தல் இரண்டு விதம். முதல்ரகத்திற்குப் பெரும்பாலும் வறுமையே காரணம்; சோம்பலே காரணம் என்று நினைக்காதீர்கள்! வீட்டைவிட்டு ஏதோ காரணத்தினால் விலக்கப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்களும் இதில் உண்டு. பிச்சை போடுவதால்தான் அது வளர்கிறது, அதை நாம் ஊக்குவிக்கக்கூடாது, அது ஒரு எத்துவேலை என்றெல்லாம் அறிவார்ந்த போதனைகள் அன்றாடம் கேட்கிறோம். கூட்டம் போடுவோம், கூடி விவாதிப்போம், சட்டங்கள் இயற்றுவோம். அதற்கு முன்னால், நீட்டிய கரத்தில் காசோ சோறோ துணியோ போட்டுவிடுவோம். இரப்பாரைக் காட்டிலும் இடாதாரே \'சிறுகுலத்தோ\' ரல்லவா? \n இன்னொரு ரகம் சன்னியாசம். துறவு, பொதுவாய், இருவகைப்பட்டது. ஒன்று, வைராக்கியம் ஏற்பட்டபின் மேற்கொள்ளப்படும் துறவு. இன்னொன்று, வைராக்கியம் ஏற்படுவதற்காக மேற்கொள்ளப்படும் துறவு. இந்த இரண்டு ரகத்தாரையும் நம்நாட்டின் திருத்தலங்களில் காணலாம். ஒருகாலத்தில், அரசர்கள் ஒருகட்டத்தில், ஆட்சிப்பொறுப்பை மகனுக்கோ (தகுதியுடையவனாய் இருந்தால்) அல்லது பொறுப்புள்ள ஒருவருக்கோ தந்துவிட்டுத் தவம்புரியச் செல்வார்கள். அரண்மனையை விட்டுவிட்டு ஆரண்யம் புகுவார்கள். செல்வத்திலும், சிறப்பிலும் இருந்தவர்கள் வலிந்து வறுமையைத் தழுவுவார்கள். அப்படிப்பட்ட ஒரு மனப்பாங்கின் தாக்கத்தை இன்றும் -- கவனித்தால் -- காணலாம். \n ஹர்த்வாரில், சாதுவுக்குத் தங்க இடமோ, உண்ண உணவோ பிரச்னையில்லை. ஒவ்வோர் ஆச்ரமத்திலும் மூன்றுமூன்று நாட்கள் தங்கிக்கொள்ளலாம். மடங்களும், சத்திரங்களும் உள்ளன. பலவிடங்களில், படித்துறையிலேயே இலவசமாக ரொட்டி வழங்குகிறார்கள். போதாதா? \n ஒரு டீக்கடைக்குப்பின் உட்கார்ந்திருக்கிறேன். கங்கையிலே கால்நனைத்தபடி. மாலை நேரம். பளபளக்கிறாள். ஆடிக்கொண்டிருக்கும் என்கால்களுக்குத் தங்கக் கொலுசு போட்டு மகிழ்கிறாள். எதையும் விழையாத ஒரு மனோபாவம்; தேவைகள், கோரிக்கைகள் யாவும் தீர்ந்துபோன நிம்மதியில் நேர்ந்த வினோதக் களைப்பு; எக்களிப்பற்ற ஏகாந்தம். மெல்லமெல்ல, வானும், கரைகளும், படித்துறைகளும், நகரின் விளக்குகளும், மக்களும், அரவங்கள் அத்தனையும் மெல்லமெல்ல மங்கி மறைகின்றன. வெட்டவெளியில் நிலைகுத்திப்போய், பார்வை செயற்படாத கண்களின் எதிரே, கற்றை மின்னலும் ஒற்றை நிலவும் குலவி நெய்த எழிலோவியமாய் எதிரே கங்கை எழுந்து நிற்கிறாள். பார்வை வரவர, பனிப்பாதை வளைவின் புகைச்சுருளாய்ப் புன்னகைத்துக் கரைகிறாள். நான் கண்பனித்துக் கரைகிறேன். \n",1]
);
//-->
வழியெங்கும் பிச்சை கேட்கிறார்கள். சாதுக்கள் அமர்ந்திருக்கிறார்கள். பார்வை சந்தித்தால் பார்வையாலேயே கேட்கிறார்கள். பாரதியின் அச்சமில்லைப் பாட்டில், 'பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்...' என்றொரு வரி வருகிறது. நம்நாட்டில், பிச்சையெடுத்தல் இரண்டு விதம். முதல்ரகத்திற்குப் பெரும்பாலும் வறுமையே காரணம்; சோம்பலே காரணம் என்று நினைக்காதீர்கள்! வீட்டைவிட்டு ஏதோ காரணத்தினால் விலக்கப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்களும் இதில் உண்டு. பிச்சை போடுவதால்தான் அது வளர்கிறது, அதை நாம் ஊக்குவிக்கக்கூடாது, அது ஒரு எத்துவேலை என்றெல்லாம் அறிவார்ந்த போதனைகள் அன்றாடம் கேட்கிறோம். கூட்டம் போடுவோம், கூடி விவாதிப்போம், சட்டங்கள் இயற்றுவோம். அதற்கு முன்னால், நீட்டிய கரத்தில் காசோ சோறோ துணியோ போட்டுவிடுவோம். இரப்பாரைக் காட்டிலும் இடாதாரே 'சிறுகுலத்தோ' ரல்லவா? இன்னொரு ரகம் சன்னியாசம். துறவு, பொதுவாய், இருவகைப்பட்டது. ஒன்று, வைராக்கியம் ஏற்பட்டபின் மேற்கொள்ளப்படும் துறவு. இன்னொன்று, வைராக்கியம் ஏற்படுவதற்காக மேற்கொள்ளப்படும் துறவு. இந்த இரண்டு ரகத்தாரையும் நம்நாட்டின் திருத்தலங்களில் காணலாம். ஒருகாலத்தில், அரசர்கள் ஒருகட்டத்தில், ஆட்சிப்பொறுப்பை மகனுக்கோ (தகுதியுடையவனாய் இருந்தால்) அல்லது பொறுப்புள்ள ஒருவருக்கோ தந்துவிட்டுத் தவம்புரியச் செல்வார்கள். அரண்மனையை விட்டுவிட்டு ஆரண்யம் புகுவார்கள். செல்வத்திலும், சிறப்பிலும் இருந்தவர்கள் வலிந்து வறுமையைத் தழுவுவார்கள். அப்படிப்பட்ட ஒரு மனப்பாங்கின் தாக்கத்தை இன்றும் -- கவனித்தால் -- காணலாம். ஹர்த்வாரில், சாதுவுக்குத் தங்க இடமோ, உண்ண உணவோ பிரச்னையில்லை. ஒவ்வோர் ஆச்ரமத்திலும் மூன்றுமூன்று நாட்கள் தங்கிக்கொள்ளலாம். மடங்களும், சத்திரங்களும் உள்ளன. பலவிடங்களில், படித்துறையிலேயே இலவசமாக ரொட்டி வழங்குகிறார்கள். போதாதா? ஒரு டீக்கடைக்குப்பின் உட்கார்ந்திருக்கிறேன். கங்கையிலே கால்நனைத்தபடி. மாலை நேரம். பளபளக்கிறாள். ஆடிக்கொண்டிருக்கும் என்கால்களுக்குத் தங்கக் கொலுசு போட்டு மகிழ்கிறாள். எதையும் விழையாத ஒரு மனோபாவம்; தேவைகள், கோரிக்கைகள் யாவும் தீர்ந்துபோன நிம்மதியில் நேர்ந்த வினோதக் களைப்பு; எக்களிப்பற்ற ஏகாந்தம். மெல்லமெல்ல, வானும், கரைகளும், படித்துறைகளும், நகரின் விளக்குகளும், மக்களும், அரவங்கள் அத்தனையும் மெல்லமெல்ல மங்கி மறைகின்றன. வெட்டவெளியில் நிலைகுத்திப்போய், பார்வை செயற்படாத கண்களின் எதிரே, கற்றை மின்னலும் ஒற்றை நிலவும் குலவி நெய்த எழிலோவியமாய் எதிரே கங்கை எழுந்து நிற்கிறாள். பார்வை வரவர, பனிப்பாதை வளைவின் புகைச்சுருளாய்ப் புன்னகைத்துக் கரைகிறாள். நான் கண்பனித்துக் கரைகிறேன்.
ரமணன்


கேதார யாத்திரையின் துவக்கம் ஹர் த்வார். ஆனால், கங்கைக் குளியலில் எல்லாமே மறந்துபோய் விடுகிறது. பெரிய தொன்னைகளில், பெண்கள் மலர்கள், விளக்கு ஆகியவற்றை ஏந்திப் பிரார்த்தனை செய்தபடி கங்கையில் விடுகிறார்கள். ஏதேதோ ஊர்களிலிருந்து வந்திருக்கும் அவர்களைப் பார்த்தாலே 'பராசக்தி!' என்று பரவசமாய்க் கூவத் தோன்றுகிறது. இவர்கள் எதற்காகக் கோவிலுக்குச் சென்று கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள்? கண்ணாடி பார்த்தால் போதாதோ?

இதைக்கேட்கவும் செய்தேனே! ஆ! அந்த அட்டைக் கறுப்புக் கன்னங்களில் எங்கிருந்து வந்து தோன்றி நெளிந்ததோ ஒரு நாணச் சிவப்பு மின்னல்!! \n உணர்ச்சி வசப்பட்டுச் சொல்லவில்லை; உள்ளார்ந்த உணர்வோடு சொல்லுகிறேன்: பெண்மை சிறப்பிக்கப்படும் வரை, இந்த நாட்டில் அறமும், அன்பும், வீரமும் தழைக்கும். இருட்டை விலக்குகிறோம் என்ற உணர்வு விளக்குக்கு இருப்பதில்லை. அதுபோலத்தான் பாரத நாட்டுப் பெண்கள். ஏன், அவர்கள் அடக்கப்படுவதில்லையா? அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதில்லையா? என்றெல்லாம் கேள்விகள் எழலாம். அவை நியாயமாகவும் இருக்கலாம். இந்தக் கூட்டங்கள், கோஷங்கள், அறிக்கைகள், கோபங்கள் எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கிவைத்து விட்டு கங்கைக்கு வாருங்கள் என்று கனிவோடு அழைக்கிறேன். அங்கே, அங்கிருந்து புரிந்து கொள்வீர்கள் நான் என்ன சொல்கிறேன் என்று!

விடுதலை என்பது சில இடங்களில் கேட்டு வழங்கப்படுவது; சில இடங்களில் போராடிப் பெறப்படுவது. ஆனால், இந்தியப் பெண்ணைப் பொறுத்தமட்டில், அது உணரப்படுவது, நினைவுகூரப்படுவது! மோழையிலே பொறியாகக் காணப்படுவதுதான் ஊழியிலே கூத்தாக எழுந்து நிற்கிறது! பெண்மையின் கொடையில் பிழைப்பதுதான் ஆண்மை. இந்தியப் பெண் என்று தன்னை உணர்கிறாளோ, அன்று தருமத்திற்குப் பொன்னாள்! தரணிக்கெல்லாம் நன்னாள்! ஒன்று சொல்லவா? கல்வியில்லாத எத்தனையோ பெண்மணிகள் கண்திறந்துதான் இருக்கிறார்கள்!

கங்கை போலவே கனலும் புனலுமாகவும் கைவிளக்காகவும் காவல் தெய்வமாகவும் அன்றாட வாழ்க்கையின் நடைக்கு அச்சாணியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கல்விமான்கள் அல்ல கல்விச்சாலைகள்! கங்கையின் களியாட்டத்தில் களைப்பு தீர்ந்தது. உடல்மட்டுமல்ல, உள்ளமும் இளைப்பாறியது. ஆசுவாசத்தில் நேர்ந்த ஆயாசத்தை ரசித்தபடிப் படியேறி வந்தேன். ஒரு பெண்மணி தேனீர் விற்கிறாள். கன்னங்கறுத்த முகம்; மின்னற் சிரிப்பு; உடுக்கள் போற் கடுக்கன்கள்; உல்லாச நிலவாய் மூக்குத்தி. பத்துப்பேரைப் பந்தாடும் வலிய தேகம். பேச்செல்லாம் பசுமழலை! 'சகோதரி! இங்கே உட்காரலாமா?' என்றதும் பதறிவிட்டாள். "அதென்ன அப்படிக் கேட்கிறீர்கள்? அதற்காகத்தானே பெஞ்சு போட்டிருக்கிறது!" அற்புதமான தேனீர் கொடுத்தாள். நெஞ்சில் இறங்கும் இளஞ்சூட்டை ரசித்தபடியே அவளிடம் கேட்டேன், 'அதெப்படி உன்னால் இவ்வளவு பிரககசமாகச் சிரிக்க முடிகிறது?' சற்றே வெட்கப்பட்டுச் சுதாரித்துக்கொண்டு சொன்னாள் 'செய்ய வேண்டியதைச் செய்கிறேன். நடக்க வேண்டியதை அவன் பார்த்துக் கொள்வான். நல்லது கெட்டது அவனுக்குத் தெரியாதா? இல்லை, நமக்குத்தான் புரியாதா? அட, சிட்டுக் குருவியின் தாகத்தைத் தீர்க்கத் தெரியாதா கங்கைக்கு?!' என்று சோழி குலுங்கச் சிரித்தபடி, மங்கிய ஸ்டவ்வை மறுபடி விசைத்தாள். நான் வியப்பில் உறைந்தேன். ]

ரமணன்

<<>>கங்கைக் கரையில்...3<<>>

3. கங்கைக் கரையில் நிற்கிறேன். தவத்தில் எழுந்த
நெருப்பில் பிறந்த செந்தமிழ்க் கவிதைபோலே,
கட்டறுந்து விரைகிறாள் கங்கை! காணக்காண,
உள்ளச் சிமிழ் உடைந்து வெள்ளமென எண்ணங்கள்
விம்மி வருகின்றன. நதி, பெண்தான், ஐயமே இல்லை.
இந்த நளினமும், ஓயாமல் கறையைக் கழுவி,
ஒருவரின் நன்றிக்கும் காத்திராமல் விரையும்
கருணையும், சுமையைச் சுவையாய்க் கருதும்
தயையும், மாறிமாறித் தோற்றமளித்தும் மாறாத
பேரழகும், இந்தப் பிரபஞ்சத்தில் பெண்ணைத்
தவிர யாருக்குண்டு?

கங்கை என் தாய், என்னைக் கழுவும்போது.
என் தோழி, என் கால்களைக் கிசுகிசுத்தபடிப்
பலப்பல வண்ணக் கதைகள் சொல்லும்போது.
குளியல் வேறு; முழுக்குப் போடுவது வேறு.
குளித்துவிட்டுத்தான் புனித நதிகளில் இறங்க
வேண்டும். இறங்கி, பாவங்களுக்கு முழுக்குப்
போடவேண்டும். கங்கை முக்திக்கு, வினை
இடையூறாக வராமல் பார்த்துக்கொள்வாள்.
'கங்கையில் எத்தனை மீன்கள்! அவையும்
முக்தி பெறுமோ?' என்று வினவுகிறார்
கபீர்தாஸ். பெறாதுதான்! முழுக்குப்
போட்டால்தான் முக்தி!

இனி, அறத்திலிருந்து சற்றும் பிறழேன்.
இந்த முடிவு இனிதே நிறைவேறத் துணைபுரிவாயாக
என்று முழுக்குப் போடவேண்டும். அப்போது, போனவினை போனவினையாய்ப் போகும். சரி, பாவம் எது? ஊட்டிய கரத்தைக் கடிப்பது, நாட்டை, தாய்மொழியை, அன்பு மனைவியை, அருமைக் குழந்தைகளைப் பழிப்பது, கையில் பொருளிருக்கக் கை நீட்டிய ஏழைக்குக் கஞ்சிகூட வார்க்காமல் விரட்டுவது, பொய்மை, திருட்டு, பொறாமை இவை போன்றவையே! இவற்றுக்கு முழுக்குப் போட்டு, முழுமனிதனாய் எழுந்து கரைக்கு வரக் கங்கை அற்புதமான வாய்ப்பு! காலைக் கதிரொளியில் தங்கச் சரிகை விரிக்கிறாள். கரையருகே கைவீசுகிறாள். நடுவே, சிறகு முளைத்துப் பறக்கிறாள். பலப்பல மகத்தான நாகரிகங்கலின் மலர்ச்சிக்குத் தோதாயிருந்தவள். மாமுனிவோர் தவம் சத்திய தரிசனத்தில் முடிந்து அற்புதக் கவிதைகளாக வெளிப்பட்டபோது காது குளிரக் கேட்டவள். சாம்ராஜ்ஜியங்களின் சரிவுகளுக்குச் சாட்சியாய் இருந்தவள்.

சீதையின் பாதம்பட்டுச் சிலிர்த்தவள். இன்றும் நாட்டின் விளக்கைக் காத்துவரும் ஏழைகளின் பாதங்களைத் தொட்டுத் தொட்டு வணங்குகின்றவள். மட மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டும் புனிதம் மாறாதவள்.

வானில் மந்தாகினியாய், வழியே ஜான்வியாய், பகீரதன் தவம் பலித்தபோது பாகீரதியாய், இதோ மலையைவிட்டுச் சமவெளியில் புகும்போது கங்கையாய்ப் பொங்கி வருகிறாள். நாம்காணும் நீருக்குக் கங்கையே மூலம். கரையோரம் கூடச் சங்கிலியைப் ப்டித்துக் கொண்டுதான் குளிக்க வேண்டியுள்ளது. அப்போதும் பறப்பது போல் உடலை விசைக்கிறது அவள் வேகம். என்னென்னெ நம்பிக்கைகளுடன், எங்கெங்கிருந்து எத்தனை எத்தனை மனிதர்கள்! கங்கை, காதல் போல், காந்தம். அழகுக்கும், ஈர்ப்புக்கும் காரணமுண்டோ? விளக்கத்தான் முடியுமோ? விலகத்தான் ஒண்ணுமோ?! \n சின்னஞ் சிரிய சிறுமி, கையில் சிறு தட்டுடன் எதிரே நிற்கிறாள். என்னைச் சாய்வாகப் பார்த்து, 'திலகமிடவா?' என்ரு இனிமையாகக் கேட்கிறாள்.

பதிலுக்குக் காத்திராமல் பிஞ்சு விரலால் சிந்தூரம் குழைத்து பற்றிய நெற்றி குளிரக் குளிர இடுகிறாள். லஹரியில், அவளது பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன். அசையாமல் ஏற்கிறாள். நெகிழ்ந்து கிடந்தவனின் மீது ஒளிப்பார்வை வீசிவிட்டுக் கூட்டத்தில் மறைகிறாள்.\n ரமணன்\n4. ஹரித்வாரா? ஹரத்வாரா? அது ஹர் த்வார்; எனில், அனைத்துக்கும் வாயில். பத்ரி, கேதார் மட்டுமன்றி, ரிஷிகேஷிலிருந்து துவங்கிப் பலப்பல திருத்தலங்களுக்குத் தலைவாசலாக விளங்குகிறது ஹர் த்வார். (ஹர் - அனைத்துக்கும் த்வார் - வாயில்)

எத்தனையோ அமைப்புகளின் ஆச்ரமங்கள் உள்ளன. தங்குவதற்குக் கணக்கற்ற விடுதிகள் உள்ளன. கட்டணங்கள் மலிவுதான். ஏராளமான உணவு விடுதிகள். ஆலு பராட்டாவும் தயிரும், சுடச்சுட குலாப் ஜாமுனும் ஆஹா! எத்தனையோ படித்துறைகள் இருந்ததலும் \'ஹர் கி பெளடி' அதாவது 'ஹரியின் பாத தூளி' என்னும் கட்டம் மிகவும் பிரசித்தியானது. கட்டவிழ்ந்து ஓடும் கங்கை, யாத்ரிகளின் வசதிக்காகத் தேக்கித் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. பழைய மணிக்கூண்டு அலங்கரிக்கும் ஒரு நீளத்திடல் கங்கையை இரண்டாகப் பிரிக்கிறது.

இடப்புறம், பிரம்மதீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. அங்கே பெரும்பாலும் இறந்தவர்களுக்கான சடங்குகள் செய்கிறார்கள். பண்டாக்கள் பிடுங்கித் தின்கிறார்கள் என்பதெல்லாம் பொய். க்ரெடிட் கார்டு, செல்பேசிக்காரர்களைக் காட்டிலும் எதுவும் கொடுமையாக இல்லை. அவரவர் வசதிக்கேற்பச் சடங்குகள் செய்துகொள்ளலாம். பாதையிலிருந்து இறங்கிப் படித்துறைக்குச் செல்லவேண்டும். எப்போதும் கூட்டமாக இருக்கும் குறுகிய சாலைகள். திடீரென்று மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப்போய், மக்கள் முகங்களில் பீதி கலந்த பிரகாசம். என்னவென்று பார்த்தால், பிரம்மாண்டமான குரங்குகள் சாரிசாரியாக மட்டுமன்றி, ஜோடிஜோடியாகக் கைகோத்துக்கொண்டு சாலையைக் கடந்துகொண்டிருந்தன. யாரும் சத்தம்கூடப் போடக்கூடாது என்று எச்சரித்தார்கள்! அவசியமற்ற எச்சரிக்கை, எவன் வாயைத்திறப்பான்?!குரங்குகள் நம்மைக் கவனித்ததாகவே தெரியவில்லை. ]

வானில் மந்தாகினியாய், வழியே ஜான்வியாய், பகீரதன் தவம் பலித்தபோது பாகீரதியாய், இதோ மலையைவிட்டுச் சமவெளியில் புகும்போது கங்கையாய்ப் பொங்கி வருகிறாள். நாம்காணும் நீருக்குக் கங்கையே மூலம். கரையோரம் கூடச் சங்கிலியைப் ப்டித்துக் கொண்டுதான் குளிக்க வேண்டியுள்ளது. அப்போதும் பறப்பது போல் உடலை விசைக்கிறது அவள் வேகம். என்னென்னெ நம்பிக்கைகளுடன், எங்கெங்கிருந்து எத்தனை எத்தனை மனிதர்கள்! கங்கை, காதல் போல், காந்தம். அழகுக்கும், ஈர்ப்புக்கும் காரணமுண்டோ? விளக்கத்தான் முடியுமோ? விலகத்தான் ஒண்ணுமோ?!

சின்னஞ் சிரிய சிறுமி, கையில் சிறு தட்டுடன் எதிரே நிற்கிறாள். என்னைச் சாய்வாகப் பார்த்து, 'திலகமிடவா?' என்ரு இனிமையாகக் கேட்கிறாள். பதிலுக்குக் காத்திராமல் பிஞ்சு விரலால் சிந்தூரம் குழைத்து பற்றிய நெற்றி குளிரக் குளிர இடுகிறாள். லஹரியில், அவளது பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன். அசையாமல் ஏற்கிறாள். நெகிழ்ந்து கிடந்தவனின் மீது ஒளிப்பார்வை வீசிவிட்டுக் கூட்டத்தில் மறைகிறாள். ரமணன்

<<>>அகம்திறந்த சுகம்....2<<>>

'இமயச் சிகரங்கள் தேவர்களின் ஆன்மாக்கள்,' என்கிறான் காளிதாசன். மேலிருந்து பார்த்தால், பாரதத்தின் பிரும்மாண்டமான அறவில்லாகப் படுத்திருக்கிறது இமயம். பூமித்தாய் களைப்பு மேலிட்டு உடம்பை முறுக்கிச் சொடக்குவிடப் புடைத்தனவே மலைத்தொடர்கள். இமயமும் அப்படித்தான். இமயம் இளைய மலைதான், திருவண்ணாமலையைக் காட்டிலும் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம், ஒருகாலத்தில் கடலாயிருந்த பகுதிதான் தற்போது இமயமாய் நெடிதுயர்ந்து நிற்கிறது. மிக உயரமான பகுதிகளில், கடல்வாழ் பிராணிகளின் எலும்புகளைக் கண்டெடுத்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தியாவுக்கு இமயம் அரண். அது இல்லையென்றால் இந்தியா பனிப்பாலைவனமாகியிருக்கும். இமயம் பாறைகளாலான மலையல்ல! பெரும்பாலும் மண்தான்.


காடுகளை அழிப்பதும், வேட்டுவைத்துச் சாலைகள் அமைப்பதுமே நிலச்சரிவுகளுக்குக் காரணம். இந்தியனுக்கு இமயம் வெறும் மலையன்று. இறையுறையும் திருக்கோவில். ஆன்மீகத் தலைவாசல். ஞானப் பாசறை. யோகத்தின் கொட்டடி. பக்திக்குத் தொட்டில். நாகரிகம், மனித நேயம் இவற்றின் ஊற்று. எழிற்கொள்ளை. கற்பனைகளின் களஞ்சியம். கவிதைக்குச் சவால். அந்தரங்கத்தின் பகிரங்கம். ரகசியங்களின் கருவூலம். உருவாய்த் தோன்றும் அருவத்தின் ஜாலம். நில்லாமல் நகரரமல் நிகழ்கின்ற கூத்து. நிசம் என்று நாம் போர்த்திக்கொண்ட பிரமைகளைத் தாக்கி நிர்மூலமாக்கி நின்று சிரிக்கும் பிரமிப்பின் உச்சம். கம்பீரத்தின் முழுவடிவம். கடவுள் வியக்கும் அழகு. ஆ! உள்ளே ஏதோ கொஞ்சம் தமிழிருப்பதால் இவ்வளவேனும் சொன்னேன்!

இமயத்தைப் பார்த்துவந்த பிறகே இந்தியன் என்ற பெயருக்குப் பொருள்புரியும். என் குருவின் திருவருளால், 1994 லிருந்து இன்றுவரை 13 முறை இமயத்தின் பல்வேறு பகுதிகளைத் தரிசிக்கும் பேறெனக்குக் கிட்டியது. ஒவ்வொரு முறை திரும்பிவந்த போதும், மறுமுறை எப்போது வாய்க்கும் என்று ஏங்கவைக்கும் இமயம்! கண்வழியே கன்னமிட்டு உயிரையெல்லாம் தனதாக்கி என்ணமெல்லாம் தன்வண்ணமாக்கும் மாயக் காதலின் மகத்தான தலைநகரம் இமயம்! நான் பலரோடும் சென்றபோதும் தனியாக மெய்சிலிர்க்கும் அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். இருமுறை, என்குருநாதர் என்னைத் தனியாக அனுப்பியபோது, வார்த்தைகளில் வடிக்க முடியாத வாழ்வை வாழ்ந்து வந்திருக்கிறேன். \'தனிமை கண்டதுண்டு, அதிலே சாரமிருக்குதம்மா,\' என்பானே பாரதி. அந்தத் தனிமையின் மடியில் அகம்திறந்த சுகம் கண்டிருக்கிறேன். பனிப்பாளங்கள் உருகி ஓடும் ஓடையில், ஒரு பரவச வெறியில் உள்ளே இறங்கி எப்படியோ உயிரோடு மீண்டிருக்கிறேன். ஒற்றையடிப் பாதை கூட இல்லாத காட்டில், எதற்கு எங்கு என்றெல்லாம் தெரியாமல் நடந்த போது, திடீரென காட்டுக் குளவிகள் கூட்டம் கூட்டமாக எதிரே வந்தும், ஒன்று கூட என்னைத் தொடாமல் சென்றதை எண்ணி வியந்து நின்றிருக்கிறேன். பாதையற்ற மலைச்சரிவொன்றில் இறங்கும் போது, வைக்கப்போன கால் யாராலோ இழுக்கப்பட்டதுபோல் அந்தரத்தில் நிற்க, கீழெ சுருண்டு கிடந்த கரிய பாம்பினைக் கண்டு புன்னகைத்துச் சென்றிருக்கிறேன். உறக்கம் தேவையற்ற உள்ளார்ந்த இரவுகளைக் கண்டிருக்கிறேன். ஒரு மின்மினிப் பூச்சி கூட மினுக்காத இருளில், மின்னல்கள் கருத்த வான்மீது சினமுற்று வாட்களாகிக் கிழிக்க, அண்டம் பொடிந்ததுபோல் இடியிடிக்க, சூறைக்காற்று பள்ளத்தாக்கில் இருக்கும் காடுகளைக் கதிகலங்கச் செய்ய, கால்பரப்பி, இடுப்பிலே கைகளை வைத்தபடி, அந்தக் காளிநடனத்தைக் கண்டு களித்திருக்கிறேன். புத்தகங்களில் ஆஹா ஓஹோ என்று பெரிதுபடுத்தப்படும் அதிசய அனுபவங்களை, அன்றாட நிகழ்ச்சிகளாகப் பார்த்திருக்கிறேன். கண்ணெதிரே பாறையுருண்டு காரோடு செத்துச் சிதறிய காட்சியைக் கண்டிருக்கிறேன். எந்தக் கல்வியாலும் என்னாளும் நேரமுடியாத மனிதப் பண்பின் உயரங்களை எழுதப் படிக்கத் தெரியாத ஏழைகளிடம் தரிசித்திருக்கிறேன். மலர்களோடு பேசி, அவற்றின் மறுமொழியால் உயிர்குளிர்ந்து போயிருக்கிறேன். \n தொடரும் இந்த அனுபவங்களோடு ஏதோ மூலையில் இருந்த என்னை எதற்காக இழுத்துவிட்டீர்கள்? குயில் மேடையேறுமா? நான் ஏன் இந்த வம்பில் சிக்கிக் கொண்டேன்? ",]

இமயத்தைப் பார்த்துவந்த பிறகே இந்தியன் என்ற பெயருக்குப் பொருள்புரியும். என் குருவின் திருவருளால், 1994 லிருந்து இன்றுவரை 13 முறை இமயத்தின் பல்வேறு பகுதிகளைத் தரிசிக்கும் பேறெனக்குக் கிட்டியது. ஒவ்வொரு முறை திரும்பிவந்த போதும், மறுமுறை எப்போது வாய்க்கும் என்று ஏங்கவைக்கும் இமயம்! கண்வழியே கன்னமிட்டு உயிரையெல்லாம் தனதாக்கி என்ணமெல்லாம் தன்வண்ணமாக்கும் மாயக் காதலின் மகத்தான தலைநகரம் இமயம்! நான் பலரோடும் சென்றபோதும் தனியாக மெய்சிலிர்க்கும் அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். இருமுறை, என்குருநாதர் என்னைத் தனியாக அனுப்பியபோது, வார்த்தைகளில் வடிக்க முடியாத வாழ்வை வாழ்ந்து வந்திருக்கிறேன். 'தனிமை கண்டதுண்டு, அதிலே சாரமிருக்குதம்மா,' என்பானே பாரதி. அந்தத் தனிமையின் மடியில் அகம்திறந்த சுகம் கண்டிருக்கிறேன். பனிப்பாளங்கள் உருகி ஓடும் ஓடையில், ஒரு பரவச வெறியில் உள்ளே இறங்கி எப்படியோ உயிரோடு மீண்டிருக்கிறேன். ஒற்றையடிப் பாதை கூட இல்லாத காட்டில், எதற்கு எங்கு என்றெல்லாம் தெரியாமல் நடந்த போது, திடீரென காட்டுக் குளவிகள் கூட்டம் கூட்டமாக எதிரே வந்தும், ஒன்று கூட என்னைத் தொடாமல் சென்றதை எண்ணி வியந்து நின்றிருக்கிறேன். பாதையற்ற மலைச்சரிவொன்றில் இறங்கும் போது, வைக்கப்போன கால் யாராலோ இழுக்கப்பட்டதுபோல் அந்தரத்தில் நிற்க, கீழெ சுருண்டு கிடந்த கரிய பாம்பினைக் கண்டு புன்னகைத்துச் சென்றிருக்கிறேன். உறக்கம் தேவையற்ற உள்ளார்ந்த இரவுகளைக் கண்டிருக்கிறேன். ஒரு மின்மினிப் பூச்சி கூட மினுக்காத இருளில், மின்னல்கள் கருத்த வான்மீது சினமுற்று வாட்களாகிக் கிழிக்க, அண்டம் பொடிந்ததுபோல் இடியிடிக்க, சூறைக்காற்று பள்ளத்தாக்கில் இருக்கும் காடுகளைக் கதிகலங்கச் செய்ய, கால்பரப்பி, இடுப்பிலே கைகளை வைத்தபடி, அந்தக் காளிநடனத்தைக் கண்டு களித்திருக்கிறேன். புத்தகங்களில் ஆஹா ஓஹோ என்று பெரிதுபடுத்தப்படும் அதிசய அனுபவங்களை, அன்றாட நிகழ்ச்சிகளாகப் பார்த்திருக்கிறேன். கண்ணெதிரே பாறையுருண்டு காரோடு செத்துச் சிதறிய காட்சியைக் கண்டிருக்கிறேன். எந்தக் கல்வியாலும் என்னாளும் நேரமுடியாத மனிதப் பண்பின் உயரங்களை எழுதப் படிக்கத் தெரியாத ஏழைகளிடம் தரிசித்திருக்கிறேன். மலர்களோடு பேசி, அவற்றின் மறுமொழியால் உயிர்குளிர்ந்து போயிருக்கிறேன். தொடரும் இந்த அனுபவங்களோடு ஏதோ மூலையில் இருந்த என்னை எதற்காக இழுத்துவிட்டீர்கள்? குயில் மேடையேறுமா? நான் ஏன் இந்த வம்பில் சிக்கிக் கொண்டேன்?

சரி, மனதிலிருந்து எப்படி வருகிறதோ அப்படியே கவிழ்த்துவிட்டு ஓடிவிடுகிறேன்.. எனக்கு வேறு பாஷை தெரியாது.. வீதி நாடகத்தில் ஏது மேடைக்கூச்சம்??!! ரமணன். கங்கைக் கரையில் நிற்கிறேன். தவத்தில் எழுந்த நெருப்பில் பிறந்த செந்தமிழ்க் கவிதைபோலே, கட்டறுந்து விரைகிறாள் கங்கை! காணக்காண, உள்ளச் சிமிழ் உடைந்து வெள்ளமென எண்ணங்கள் விம்மி வருகின்றன. நதி, பெண்தான், ஐயமே இல்லை. இந்த நளினமும், ஓயாமல் கறையைக் கழுவி, ஒருவரின் நன்றிக்கும் காத்திராமல் விரையும் கருணையும், சுமையைச் சுவையாய்க் கருதும் தயையும், மாறிமாறித் தோற்றமளித்தும் மாறாத பேரழகும், இந்தப் பிரபஞ்சத்தில் பெண்ணைத் தவிர யாருக்குண்டு? \n கங்கை என் தாய், என்னைக் கழுவும்போது. என் தோழி, என் கால்களைக் கிசுகிசுத்தபடிப் பலப்பல வண்ணக் கதைகள் சொல்லும்போது. குளியல் வேறு; முழுக்குப் போடுவது வேறு. குளித்துவிட்டுத்தான் புனித நதிகளில் இறங்க வேண்டும். இறங்கி, பாவங்களுக்கு முழுக்குப் போடவேண்டும். கங்கை முக்திக்கு, வினை இடையூறாக வராமல் பார்த்துக்கொள்வாள். 'கங்கையில் எத்தனை மீன்கள்! அவையும் முக்தி பெறுமோ?' என்று வினவுகிறார் கபீர்தாஸ். பெறாதுதான்! முழுக்குப் போட்டால்தான் முக்தி!


இனி, அறத்திலிருந்து சற்றும் பிறழேன். இந்த முடிவு இனிதே நிறைவேறத் துணைபுரிவாயாக என்று முழுக்குப் போடவேண்டும். அப்போது, போனவினை போனவினையாய்ப் போகும். \n சரி, பாவம் எது? ஊட்டிய கரத்தைக் கடிப்பது, நாட்டை, தாய்மொழியை, அன்பு மனைவியை, அருமைக் குழந்தைகளைப் பழிப்பது, கையில் பொருளிருக்கக் கை நீட்டிய ஏழைக்குக் கஞ்சிகூட வார்க்காமல் விரட்டுவது, பொய்மை, திருட்டு, பொறாமை இவை போன்றவையே! இவற்றுக்கு முழுக்குப் போட்டு, முழுமனிதனாய் எழுந்து கரைக்கு வரக் கங்கை அற்புதமான வாய்ப்பு! காலைக் கதிரொளியில் தங்கச் சரிகை விரிக்கிறாள். கரையருகே கைவீசுகிறாள்.

நடுவே, சிறகு முளைத்துப் பறக்கிறாள். பலப்பல மகத்தான நாகரிகங்கலின் மலர்ச்சிக்குத் தோதாயிருந்தவள். மாமுனிவோர் தவம் சத்திய தரிசனத்தில் முடிந்து அற்புதக் கவிதைகளாக வெளிப்பட்டபோது காது குளிரக் கேட்டவள். சாம்ராஜ்ஜியங்களின் சரிவுகளுக்குச் சாட்சியாய் இருந்தவள். சீதையின் பாதம்பட்டுச் சிலிர்த்தவள். இன்றும் நாட்டின் விளக்கைக் காத்துவரும் ஏழைகளின் பாதங்களைத் தொட்டுத் தொட்டு வணங்குகின்றவள். மட மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டும் புனிதம் மாறாதவள்.

சரி, மனதிலிருந்து எப்படி வருகிறதோ அப்படியே கவிழ்த்துவிட்டு ஓடிவிடுகிறேன்.. எனக்கு வேறு பாஷை தெரியாது.. வீதி நாடகத்தில் ஏது மேடைக்கூச்சம்??!!
ரமணன்